லக்னெள தீவிரவாத தடுப்புப் படையின் தேடுதல் வேட்டை என்கவுண்டரில் முடிந்தது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் ஒருவரை பிடிக்க தீவிரவாத தடுப்புப் படையினர் மேற்கொண்டிருந்த தேடுதல் வேட்டையானது இன்று அதிகாலை மூன்று மணி அளவில் முடிவுக்கு வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை ASHUTOSH TRIPATHY

செவ்வாய்க்கிழமை நண்பகலில், லக்னெளவில் உள்ள தாக்கூர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதியொருவரை கைது செய்ய போலீசார் சென்ற போது, பதுங்கியிருந்த அந்த சந்தேக நபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநில தீவிரவாத தடுப்புப் படை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதை தொடர்ந்து, மோதல் நீடித்து வந்தது.

படத்தின் காப்புரிமை ASHUTOSH TRIPATHY

சம்பந்தப்பட்ட இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், இன்று அதிகாலை மூன்று மணிக்கு தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது.

மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் அஸின் அருண் பிபிசியிடம் கூறுகையில், ''மூன்று மணிக்கு தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது. இதில், மாநிலத்தின் தீவிரவாத தடுப்புப் படை போலீசார் ஈடுபட்டிருந்தனர். எந்த போலீஸாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருதரப்பிலிருந்தும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பின், இறுதியாக அவர் கொல்லப்பட்டார்'' என்றார்.

படத்தின் காப்புரிமை ASHUTOSH TRIPATHY

என்கவுண்டரை தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து இரு துப்பாக்கிகள், ஒரு கத்தி கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்