மார்ச் 16ஆம் தேதி தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்

  • 8 மார்ச் 2017

வரும் மார்ச் 16-ஆம் தேதியன்று, தமிழக நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 16- ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குமென்றும், அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், கடந்த ஜனவரி 23-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 1-ஆம் தேதிவரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் ஆளுனர் உரையாற்றினார்.

அதன் பிறகு ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய, புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த 16-ஆம் தேதி பதவியேற்றார். அதற்குப் பிறகு அவரது அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நடைபெற்றது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்ற பிறகு, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிதித் துறையும் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்