500 கிலோ பெண்ணுக்கு அறுவை சிகிச்சையால் 100 கிலோ குறைப்பு

  • 9 மார்ச் 2017

உலகின் மிக அதிக எடையுள்ள பெண் என்று நம்பப்படும் எகிப்திய பெண்ணுக்கு இந்தியாவில் எடை குறைப்பு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Saifee Hospital
Image caption இமான் அகமத் அப்துல்லாட்டி அறுவை சிகிச்சைக்கு பிறகு

இமான் அகமத் அப்துல்லாட்டி என்ற அந்தப் பெண், அறுவை சிகிச்சைக்கு பிறகு 100கிலோ குறைந்துள்ளதாக மும்பை சய்ஃபி மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

"எகிப்திற்கு விமானத்தில் திரும்ப செல்லக்கூடிய அளவிற்கு உடல் தகுதியை பெற வைக்க முயற்சித்து வருகிறோம்" என அந்த மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அப்துலாட்டி, தனி விமானம் மூலம் ஜனவரி மாதம் இந்தியா வருவதற்கும் முன்வரை, 25 வருடங்களாக வெளியே எங்கும் செல்லவில்லை என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

180 கிலோ போலீஸ்காரருக்கு கேலி ட்விட்டரால் அடித்தது அதிர்ஷ்டம்

வரும் மாதங்களில் அவரின் எடை மேலும் குறையும் என மருத்துவமனை செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

எடை குறைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முஃபசல் லக்டவாலாவின் தலைமையில், மருத்துவக் குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டது.

பாரியாட்ரிக் அறுவை சிகிச்சை என்று அழைக்கப்படும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை, விபரிதமான அளவில் (உடல் எடை குறையீடு 40 அல்லது 35க்கும் அதிகமானவர்கள்) எடை அதிகமானவர்களுக்கு கொடுக்கப்படும் கடைசி நம்பிக்கை சிகிச்சையாகும்.

படத்தின் காப்புரிமை Saifee Hospital
Image caption Saifee Hospital

அப்துலாட்டி பிறக்கும் போது ஐந்து கிலோவாக இருந்ததாகவும், ஒட்டுண்ணி தொற்றால் உடலின் பாகங்கள் வீங்கும் நிலையான எலிபாண்டியாசிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டதாகவும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அப்துலாட்டியின் 11 வயதில், அவரின் எடை மிகவும் அதிகமான அளவில் உயர்ந்தது, மேலும் வலிப்புநோய் வந்து வந்து படுத்த படுக்கையாகிவிட்டார்.

அவரின் தாய் மற்றும் சகோதரி அவரை கவனித்து கொண்டனர்.

500 கிலோ எடை கொண்ட எகிப்திய பெண்ணுக்கு இந்தியாவில் அறுவை சிகிச்சை

அப்துலாட்டி எலிபாண்டியாசிஸ் நோயால் பாதிக்கப்படவில்லை. ஆனால் எடை அதிகரிப்பு தொடர்பான லிம்ஃபோடிமா என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அவரின் கால்கள் அசாதாரண அளவில் வீங்கி இருப்பதாக நம்புவதாக, டிசம்பரில் மருத்துவர் லக்டவாலா பிபிசியிடம் தெரிவித்தார்.

எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள்

இரைப்பை பட்டை சிகிச்சை: பட்டை போன்ற வடிவத்தால் வயிற்றின் அளவை குறைத்து, அதன் விளைவாக குறைவான அளவு உணவில் வயிறு நிரம்பியது போலான உணர்வை தருவது

இரைப்பை மாற்று அறுவை சிகிச்சை: வயிற்றின் பெரும்பாலான பகுதிக்கு பின்புறமாக செரிமான அமைப்பை செலுத்தி, குறைந்த உணவு செமிப்பில், வயிறு நிரம்பியது போன்ற உணர்வை தருவது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்