ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் திட்டமிடப்பட்டிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசல் பகுதியில் நடந்து வந்த போராட்டம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம்

நெடுவாசலில் தொடரும் போராட்டம்: குறையாத கூட்டம் (புகைப்படத் தொகுப்பு)

Image caption தாற்காலிகமாக அமைதி

இந்தியா முழுவதுமாக 31 இடங்களில் சிறிய அளவில் ஹைட்ரோ கார்பன்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் முதற்கட்டமாக பணிகள் துவங்கப்படவிருப்பதாக கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். பிறகு இந்த எதிர்ப்பு ஒரு போராட்டமாக உருப்பெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நெடுவாசலுக்கு வந்து போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

Image caption நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

இந்தத் திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்ட வடகாடு, நல்லாண்டார் கொல்லை உள்ளிட்ட பல கிராமங்களிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டது.

இதற்குப் பிறகு மாநில முதலமைச்சர் பழனிச்சாமியைச் சந்தித்த போராட்டக் குழுவினர், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கோரினர்.

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக்குழுவுக்கு முதல்வர் உறுதி

Image caption நெடுவாசல் போராட்ட குழுவினர் - தமிழக முதல்வர் சந்திப்பு

இதற்குப் பிறகு இன்று வியாழக்கிழமை மாலையில் போராட்டக்குழுவினர் மத்தியில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாநில அரசு இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு எடுத்துவரும் நடவடிக்கை குறித்துக் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்திற்கு மாநில அரசு வழங்க வேண்டிய அனுமதிகளை வழங்காது என்றும் அவர் கூறினார்.

இதற்குப் பிறகு, இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக நெடுவாசல் போராட்டக்குழுவினர் அறிவித்தனர்.

நெடுவாசலில் 16-வது நாளாக தொடரும் போராட்டம்; ஸ்டாலின் நேரில் ஆதரவு

மேலும், வடகாடு போன்ற இடங்களிலும் போராட்டக்காரர்களுடன் மாநில அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை ஒத்திவைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்