ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் போட்டி: தீபா அறிவிப்பு

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு நடக்கவிருக்கும் இடைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா அறிவித்திருக்கிறார்.

திருக்குறளுடன் தொடங்கி எம்ஜிஆர் பாடலை மேற்கோள் காட்டிய தீபா

புதிய அமைப்பைத் துவங்கினார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா

படத்தின் காப்புரிமை @THANTHITV
Image caption ஆர்.கே.நகரில் களமிறங்க முடிவு

ஜெயலலிதா இறந்ததால் காலியான சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் இன்று வியாழக்கிழமை அறிவித்தது.

இந்த நிலையில் வியாழக்கிழமை மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தீபா, தான் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

சசிகலாவுடன் ஒருபோதும் இணைந்து செயல்படப்போவதில்லை என்றும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அளித்த ஆதரவு மரியாதை நிமித்தமானது என்றும் தீபா தெரிவித்தார்.

தி.மு.கவைத் தவிர, வேறு யார் ஆதரவளித்தாலும் ஏற்கப்போவதாக தெரிவித்த தீபா, பன்னீர்செல்வம் அணியினர் வேட்பாளரை நிறுத்தினாலும் தான் பின்வாங்கப் போவதில்லை என்று கூறினார்.

திமுக தயாராகிறது

இதற்கிடையில் தி.மு.கவின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தி.மு.க. அறிவித்துள்ளது. வேட்பாளர்களுக்கான நேர்காணல் 13-ஆம் தேதி நடக்குமென்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்