புதுவை மருத்துவமனையில் சிகிச்சையின்போது மின் தடையால் உயிரிழந்த 3 நோயாளிகள்

புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரத்த சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) சிகிச்சை அளிக்கும்போது ஏற்பட்ட மின்தடையால், சிகிச்சை பெற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

படத்தின் காப்புரிமை Subendu Sarkar

கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நோயாளிகள் இலவசமாக சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 6 டயாலிஸிஸ் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்றும் பலர் மருத்துவமனையில் டயாலிஸிஸ் சிகிச்சை பெற வந்தனர்.. சிறுநீரக இயல் பிரிவில் ரத்தம் சுத்திகரிப்பு பணி நடந்து கொண்டிருந்தபோது, காலை 11 மணிக்கு திடீரென மின்சாரம் தடை பட்டது. அப்போது, மாற்று ஏற்பாடாக இருந்த இன்வெர்டர் இயந்திரங்களும் இயங்கவில்லை.

அப்போது சிகிச்சையில் இருந்த 75 வயதுடைய ஒரு மூதாட்டிக்கும், 50 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணும், ஆணும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். பெண்கள் இருவரும் உடனடியாக இறந்த நிலையில், இன்னொருவர் தீவிர கிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டயாலிஸிஸ் சிகிச்சை பெற வந்தவர்கள் மின் தடை ஏற்பட்டதால் உயிரிழந்த சம்பவம் மருத்துவமனையில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்தவர்களின் உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, புதுவை மாநில சுகாதாரத்துறை இயக்குநர் ராமனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், சம்பவம் நடந்த நேரத்தில் பணயில் இருந்த மருத்துவர் உள்பட பணியாளர்கள் அனைவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்