பேறு கால விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு; நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

மகப்பேறு சீர்திருத்த மசோதா 2016, மார்ச் 9 ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருகின்ற 12 வார பேறு கால விடுமுறையை, முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் 26 வாரங்களாக இந்த மசோதா அதிகரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Fiona Goodall/Getty Images
Image caption முதல் இரண்டு குழந்தைகளுக்காக மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு

மகப்பேறு சீர்திருத்த மசோதா 2016 மாநிலங்களவையில் கடந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களாக அதிகரிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு உயர்வுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு

மகப்பேறு சீர்திருத்த மசோதா 2016 - முக்கிய அம்சங்கள்

•பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கின்ற 12 வார மகப்பேறு விடுமுறை இனிமேல் முதல் இரண்டு குழந்தைகளுக்கு 26 வாரங்களாக அதிகரிப்பு.

•இரண்டு குழந்தைகளுக்கு மேலான மகப்பேறு விடுமுறை தற்போதைய 12 வாரங்களாகவே தொடரும்.

•3 மாதங்களுக்கு குறைந்த குழந்தையை தத்து எடுக்கின்ற தாய்மாருக்கும், "உரிமை தாய்"-க்கும் மகப்பேறு விடுப்பு 12 வாரங்களாக இருக்கும். "உரிமை தாய்" என்பவர் தன்னுடைய கரு முட்டையை இன்னொரு பெண்ணின் கருப்பையில் வைத்து வளர்த்தெடுக்கும் உயிரியல் தாய் என வரையறுக்கப்படுகிறார்.

படத்தின் காப்புரிமை ARINDAM DEY/AFP/Getty Images
Image caption 50-க்கு மேலான தொழிலாளர்கள் பணிபுரியும் எல்லா நிறுவனங்களிலும், பணிபுரியும் தாய்மாருக்கு குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் கட்டாயம்

•50-க்கு மேலான தொழிலாளர்கள் பணிபுரியும் எல்லா நிறுவனங்களிலும், பணிபுரியும் தாய்மாருக்கு குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் வழங்கப்பட வேண்டும். தன்னுடைய குழந்தையை பராமரிக்கவும், குழந்தைகள் பராமரிப்பு இடத்தில் குழந்தைக்கு பாலூட்டவும் இத்தகைய தாய்மார்களுக்கு பணி நேரத்தின்போது நான்கு முறை அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இந்தியாவில் மகப்பேறு விடுப்பு இரட்டிப்பாகிறது

தமிழக அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு உயர்வுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு

•வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க முடியும் என்றால், வேலைக்கு அமர்த்துவோர் அவ்வாறு அனுமதி வழங்கலாம்.

•பணி நியமனம் வழங்கும் நேரத்தில் இருந்து எல்லா நிறுவனங்களும் இத்தகைய வசதிகளை பெண்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும்.

இந்தியாவிலுள்ள இலட்சக்கணக்கான பெண்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றுள்ள மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சர் மேனகா காந்தி நன்றி தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை NARINDER NANU/AFP/GettyImages
Image caption வேலைக்கு திரும்புவதற்கு முன்னால், தன்னுடைய இயல்பு நிலையை தாய் மீடு்டெடுக்க இந்த விடுமுறை அதிகரிப்பு உதவும்

பணிபுரியும் பெண்களுக்கு விடுத்த செய்தியில், குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் பெண்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கும் அவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சகம் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதற்கான பணிகளை தொடரும் என்று தெரிவித்திருக்கிறார்.

குழந்தை பெற்றுகொள்ளும் தாய்மார், மகப்பேற்றுக்கு பின்னர் 6 மாதங்கள் தாய் பாலூட்ட தேவையான அவகாசம் கிடைக்கும் வகையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சர் வைத்த வேண்டுகோளை தொடர்ந்து இந்த சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

செல்லா நோட்டு நெருக்கடியில் பிறந்த குழந்தை உ.பி பிரசார மையத்தில்

குழந்தை பெற்றெடுத்த தாய் பணிக்கு மீண்டும் திரும்புவதற்கு முன்னால், தன்னை முழுமையாக பழைய இயல்பு நிலைமைக்கு மீட்டெடுக்கவும் இந்த கால அவகாசம் உதவும்.

உரிமைத் தாய் மற்றும் தத்து எடுக்கும் தாய்மாருக்கும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுவது தேவை என்பதை பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சர் தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காணொளி;

பொம்மைகளை கொண்டு மகப்பேற்றுப் பயிற்சி

'மகப்பேறுகால பராமரிப்பில் இலங்கை கணிசமான முன்னேற்றம்'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்