இந்தியாவில் மாருதி சுசுகி ஆலை கலவரம்: 31 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

டெல்லியின் புறநகர் பகுதியில் 2012 ஆம் ஆண்டு கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின் முக்கிய ஆலையில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக 31 ஊழியர்கள் குற்றவாளிகள் என்று இந்திய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

மூத்த மேலாளர் ஒருவர் கொல்லப்பட்ட கலவரத்தில், பிற 117 தொழிற்சாலை ஊழியர்கள் விடுவிக்கப்பட்டனர்.

காயமடைந்த 80 பேரில் இரண்டு ஜப்பானியர்களும் அடங்குவர்.

ஊதியம் மற்றும் ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் தொழிற்சாலையில் தற்காலிமாக கார் தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து பதற்றங்கள் நிலவுவதால், மானேசரில் உள்ள தொழிற்சாலைக்கு வெளியே கூடுதல் போலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஏழு பணியாளர்கள் மரணம் விளைவிக்கும் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். அது தொடர்பான தீர்ப்பு விரைவில் வரவுள்ளது.

30,000க்கும் மேலான பணியாளர்கள் அவர்களின் உணவுகளை புறக்கணித்து அவர்களின் சக ஊழியர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் மேலும் "நடவடிக்கைகள் தொடரும்" என எச்சரித்தனர்.

இந்த மோதல்கள் தொடர்பாக, மேலாளர்கள் மற்றும் பணியாளார்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி கொண்டனர்; அதனை தொடர்ந்து பணியாளர் மேற்பார்வை கடினமாக அமைந்தது.

ஹரியானா மாநிலத்தில் இருக்கும் தொழிற்சாலையில், இந்த வன்முறை, பணியாளர் ஒருவருக்கும் மேற்பார்வையாளர் ஒருவருக்கும் நடந்த வாக்குவாதத்தால் எழுந்தது என நம்பப்படுகிறது.

மாருதி சுசுகியின் பெரும் பங்குகள் ஜப்பானிய நிறுவத்திற்குரியது, எனினும் இந்தியாவின் வளர்ச்சியடைந்து வரும் சந்தையில் 50 சதவீத பங்குகளுடன் மாருதி சுசுகி முக்கிய இடத்தை கொண்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்