இந்தியா: 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்

இந்தியாவின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசம் உள்பட சட்டமன்ற தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் முடிவுகள் இன்று (சனிக்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உத்தரப்பிரதேச மாநில தேர்தல் முடிவுகள்

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் செல்வாக்கால், தேசிய ஆளுங் கட்சியான பாஜக, தற்போது ஆளுங்கட்சியாக உள்ள பிராந்திய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியை வென்று உத்தரப்பிரதேச மாநிலத்தை தங்களால் வெல்ல முடியும் என்று நம்புகிறது.

இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பிரதமர் மோதியின் ஆட்சி மற்றும் தலைமையின் மீதான சிறிய கருத்தறியும் வாக்கெடுப்பாக கருதப்படுகிறது.

தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. வாக்கு எண்னிக்கை நடைபெறும் அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்