உத்தரப்பிரதேசத்தில் பாஜக முன்னிலை

உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உத்தரப்பிரதேசத்தில் பாஜக முன்னிலை

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 77 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சமாஜ்வாதி கூட்டணி 22 தொகுதிகளிலும் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை 12 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல்வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 33 தொகுதிகளிலும், ஆம் ஆத்மீ கட்சி 20 தொகுதிகளிலும், அகாலிதளம் கூட்டணி 19 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 18 தொகுதிளிலும், காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல்வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ், பாஜக மற்றும் நாகா மக்கள் முன்னணி ஆகியவை தலா 1 தொகுதியில் முன்னிலை வகிக்கின்றன.

கோவா மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக மற்றும் சுயேச்சை ஆகியவை தலா 1 தொகுதியில் முன்னிலை வகிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்