வெற்றி முகத்தில் நவ்ஜோத்சிங் சித்து

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து 16, 000-க்கும் அதிகமான வாக்கு வித்தியசாத்தில் தனக்கு அடுத்தபடியாக உள்ள பாஜக வேட்பாளர் ராஜேஷ் குமார் ஹனியை விட முன்னிலை பெற்றுள்ளார்.

Image caption வெற்றி முகத்தில் நவ்ஜோத்சிங் சித்து

பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த நவ்ஜோத்சிங் சித்து , கடந்த ஆண்டு தனது நாடாளுமன்ற கட்சி உறுப்பினர் கட்சி பதவியிலிருந்தும், பாஜகவிலிருந்தும் விலகினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஜனவரி மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் முன்னிலையில், அக்கட்சியில் சேர்ந்த நவ்ஜோத்சிங் சித்து, அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சாராபாய் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்