உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜக ஆட்சி?

  • 11 மார்ச் 2017

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி (பாஜக) முன்னிலை வகித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை बीजेपी अल्पसंख्यक मोर्चाSAMIRATMAJ MISHRA
Image caption உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜக ஆட்சி?

உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக 293 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான அப்னா தளம் (சோனிலால் பிரிவு) 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

ஆளுங்கட்சியான சமாஜ்வாதி 58 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 11 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

கடந்த சட்டப்பேரவையின் எதிர்க்கட்சியும், முன்னாள் ஆளுங்கட்சியுமான பகுஜன்சமாஜ் கட்சி 15 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடைசியாக கடந்த 2002-ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சரான ராஜ்நாத்சிங் முதல்வராக இருந்தபோதுதான் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Getty Images

1991-ஆம் ஆண்டு நடந்த உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் 221 தொகுதிகளை தனிப்பெரும்பான்மையுடன், பாஜக முதல்முறையாக ஆட்சியில் அமர்ந்தது. கல்யாண்சிங் முதல்வராக பதவி ஏற்றார்.

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மை பெறும் நிலை ஏறக்குறைய உறுதியாகிவிட்டதால், முதல்வர் வேட்பாளர் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்ட பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரை தங்கள் கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிய வரும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்