உத்தராகண்ட் மற்றும் கோவா மாநில முதல்வர்கள் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி

ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடந்துவரும் நிலையில், உத்தராகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் மற்றும் கோவா முதல்வர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர் ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர்.

படக்குறிப்பு,

உத்தராகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்

உத்தராகண்ட் மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி 55 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், உத்தராகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் தற்போது நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டார். தற்போது அவர் இரு தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளார்.

படக்குறிப்பு,

மாநில முதல்வர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர்

அதே போன்று, கோவாவில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அங்கு பா.ஜ.க ஆளுங்கட்சியாக இருந்தது வருகிறது. மாநில முதல்வர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர் மண்ட்ரெம் தொகுதியில் போட்டியிட்டார். அவரும் தோல்வியை தழுவியுள்ளார்.

மணிப்பூர் மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஓக்ரம் இபோபி சிங் மணிப்பூரில் தெளபல் தொகுதியில் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளாவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

படக்குறிப்பு,

12.30 மணி நிலவரம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்