`அகிலேஷ் - ராகுலை விட இளைஞர்களின் பெரிய அடையாளம் நரேந்திர மோடி'

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், சமாஜவாதி - காங்கிரஸ் கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவு, அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்தியை விட, இளைஞர்களின் பெரிய அடையாளமாகத் திகழ்வது நரேந்திர மோடிதான் என்பது தெளிவாகியுள்ளது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சுனிதா அரோன்.

படத்தின் காப்புரிமை TWITTER

ஏற்கெனவே, 2014-ஆம் ஆண்டு, மோடிதான் இளைஞர்களின் அடையாளம் என்பது நிரூபணமானது. இப்போது அது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தோல்வி முகத்தில் காங்., - சமாஜ்வாதி கூட்டணி : பிபிசி தமிழ் கார்ட்டூன்

எனினும், சில பிராந்தியங்களில், இளைஞர்கள் அகிலேஷை ஆதரித்துள்ளனர். ஆனால், ராகுல் வரவு அவருக்கு கை கொடுக்கவில்லை.

சமாஜவாதி கட்சி 298 தொகுதிகளிலும், காங்கிரஸ் 105 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images

மோடியின் ஆக்ரோஷமான பிரசாரத்துக்கு ராகுல் - அகிலேஷ் கூட்டணியால் போதிய உத்வேகத்துடன் ஈடுகொடுக்க முடியவில்லை. இதேபோன்ற நிலை, பிகாரில் ஏற்பட்டது. அப்போது, நிதிஷ்குமார் - லாலு திறமையாக எதிர்கொண்டனர். உத்தரப் பிரதேசம், பிகாரில், வாக்காளர்கள் கவனித்து, ஆராய்ந்து முடிவெடுப்பார்கள் என்கிறார் சுனிதா அரோன்.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடிக்குமா ஆம் ஆத்மி கட்சி ?

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் - சமாஜவாதி கூட்டணி நல்லதுதாந். ஆனால், அகிலேஷ் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியும் இருந்தது. பகுஜன் சமாஜ கட்சியும் வாக்குகளைப் பிரித்துவிட்டது. பிகாரில், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்தன. உத்தரப் பிரதேசத்தில், பகுஜன் சமாஜ கட்சி அல்லது ஆர்எல்டி அல்லது பீஸ் கட்சியுடன் இணைந்திருக்க வேண்டும் என்று சுனிதா அரோன் சுட்டிக்காட்டினார்.

வெற்றி முகத்தில் நவ்ஜோத்சிங் சித்து

கடந்த 1993-ஆண் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜவாதியும் கூட்டணி அமைத்தன. அதே நேரத்தில், தலித், யாதவ், முஸ்லிம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பெரும் பகுதியினர் அந்தக் கூட்டணிக்கு ஆதரவளித்தனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அகிலேஷ் - ராகுல்

உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் கட்டியெழுப்ப முடியாத சூழ்நிலையில் உள்ளதால், காங்கிரஸ் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அகிலேஷ் யாதவ் குடும்பத்தில் குழப்பம் உள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களையும், குடும்பத்தாரையும் எவ்வாறு அரவணைத்துச் செல்வது என்பதை அகிலேஷ் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் சுனிதா அரோன்.

5 மாநில தேர்தல் நிலவரம்: பா.ஜ.க - 2, காங்கிரஸ் - 1, இழுபறி - 2

அகிலேஷ் தனது கட்சியில் உள்ள அதிருப்திகளைப் போக்க வேண்டும். மார்ச் மாதம் புதிய கட்சி துவக்குவதாக அக் கட்சியின் மூத்த தலைவர் ஷிவ்பால் யாதவ் கூறியிருக்கிறார். தற்போது கட்சி தோல்வியடைந்துவிட்ட நிலையில் அதற்கான வாய்ப்புக்கள் இன்னும் அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா குப்தா தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிகரிக்கும் சவால்

தோல்வியை அடுத்து, காங்கிரஸிலும் எதிர்ப்புக் குரல்கள் எழலாம். ராகுல் காந்தியின் திறமை குறித்து கேள்வி எழுப்ப்ப்படாலம். அக் கட்சியில் தொண்டர்கள் இருக்கிறார்ள். ஆனால் தலைவர்களை அவர்கள் நம்புவதில்லை என்கிறார் ஸ்மிதா குப்தா.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் 2019-ல் நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸ் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்மிதா குப்தா.

இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், காங்கிரஸ் கட்சி கூட்டணியைத் தொடர்வதுடன், பகுஜன் சமாஜ கட்சியுடனும் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில், 2019-ல் அந்தக் கட்சிக்கு அதிக ஆதரவு தேவை என்கிறார் சுனிதா அரோன்.

பணமதிப்பு நீக்கம் தாக்கமில்லை

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு நீக்க நடவடிக்கை, இந்தத் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகியுள்ளது. குறிப்பாக, பாரதீய ஜனதாவுக்கு எந்தவிதமான எதிர்மறை தாக்கமும் ஏற்படவில்லை என்பது அக் கட்சி பெற்றுள்ள ஆதரவை வைத்தை தெரிந்து கொள்ளலாம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்