உ.பி. தேர்தல் முடிவு தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? - என்.ராம் பேட்டி

உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள், மோடி அலை தொடர்வதைத்தான் காட்டுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த ராம், மோடிக்கான ஆதரவு தொடர்வதற்கான காரணங்களைப் பட்டியலிட்டார்.

மோடியின் வெற்றிப் பயணம்: தடுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள்

உ.பி. தேர்தல் முடிவு குறித்து முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள்?

"ஆட்சியாளர்கள் மீது மக்களுக்குள்ள அதிருப்தி அகிலேஷ் புதிய பாதையில் செல்ல முயன்றாலும் கட்சி, ஆட்சி, அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்ற முடியாதது ஆகியவையும், மோடியின் மீதுள்ள ஈர்ப்பு, மக்கள் ஆதரவு ஆகியவையும் காரணம்" என்றார்.

பண மதிப்பு நீக்கத்தால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்பதை இந்த முடிவு தெளிவுபடுத்துகிறது.

படத்தின் காப்புரிமை Kevin Frayer/Getty Images

அடுத்து, காங்கிரஸ் கட்சி உ.பி.யில் பலவீனமாக உள்ளது. பல ஆண்டுகளாக ஜூனியர் ஆட்டக்காரராகவே இருக்கிறது என்றார்.

கார்ட்டூன்: உ.பி: தேர்தல் சின்னங்கள், தேர்தலுக்குப் பிறகு!

`அகிலேஷ் - ராகுலை விட இளைஞர்களின் பெரிய அடையாளம் மோடி'

ராகுல் - அகிலேஷ் என்ற இரு இளைஞர்களை முன்னிறுத்தியும் எடுபடாமல் போனதற்கு, நரேந்திர மோடியின் மீதுள்ள நம்பிக்கைதான் காரணம் என நினைக்கிறேன். அகிலேஷ் அரசுக்கு எதிராக ஒரு அதிருப்தி உள்ளது. இருந்தாலும், மோடி அலை தொடர்கிறது என ராம் சுட்டிக்காட்டினார்.

உ.பி.தேர்தல் முடிவு: "மோதி அலை தொடர்வதை காட்டுகிறது" - என்.ராம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உ.பி.தேர்தல் முடிவு: “மோதி அலை தொடர்வதை காட்டுகிறது” - என்.ராம்

சாதி ரீதியாக வாக்களித்தார்களா?

மக்கள் எப்போதும் சாதி அடிப்படையில் வாக்களிப்பதில்லை. ஒரு விதிவிலக்கு என்னவென்றால், முஸ்லிம்கள் பாரதீய ஜனதாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஒரு மாற்றம் இருந்தால் அது எல்லா மக்களிடமும் எதிரொலிக்கும் என ராம் கருத்துத் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Kevin Frayer/getty Images

தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

பாரதீய ஜனதாவை ஓரளவுக்குப் பலப்படுத்தும். பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும் ஓரளவு பலம் பெற்றுள்ளது என்றார்.

பா.ஜ.கவுக்கு கிடைத்த ஹோலி பரிசு ; தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் (புகைப்படத் தொகுப்பு)

உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜக ஆட்சி?

பிராந்திய கட்சிகளுக்கு சமிக்ஞை

பிராந்திய கட்சிகளைப் பொருத்தவரை, இந்தத் தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளிக்கும் வகையிலேயே உள்ளன. இரு தேசிய கட்சிகளும் ஆதாயமடைந்துள்ளன. இந்தச் சுற்று தேசியக் கட்சிகளுக்கு ஆதரவாகச் சென்றுவிட்டாலும், எல்லா பிராந்தியக் கட்சிகளுமே பலவீனமாகிவிட்டதாகச் சொல்ல முடியாது என்றும் என். ராம் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்