பிரேசிலில் அதிகளவில் பரவும் யெல்லோ ஃபீவர் எனப்படும் மஞ்சள் காய்ச்சல்

  • 12 மார்ச் 2017

பிரேசிலில் சமீப ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான திடீர் நோய் பரவல் ஒன்றை நாடு எதிர்கொண்டுவரும் நிலையில், ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் யெல்லோ ஃபீவருக்கு எதிராக தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இதற்கு சுமார் 12 மில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படும். மேலும், இந்த ஆண்டு இறுதிக்கும் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

ரியோ மாநிலத்தில் யெல்லோ ஃபீவர் தாக்கம் அண்டை மாநிலங்களில் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது.

டிசம்பர் மாதத்திலிருந்து சுமார் 130 பேர் யெல்லோ ஃபீவர் காரணமாக பலியாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த மாதத்தில்தான் நோயின் திடீர் பரவல் முதன்முறையாக கண்டறியப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்