திருகோணமலையில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் இருவர் உயிரிழப்பு

இலங்கையில் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுமி உள்பட மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Image caption நுளம்பு ஓழிப்பு பணியில் சுகாதார துறை

இந்த இரு மரணங்களும் இன்று ஞாயிறுக்கிழமை அதிகாலையில் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இது வரை டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்பகுதியில் 8-ஆக அதிகரித்துள்ளது.

திருகோணமலை அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி மற்றும் 40 வயதான பெண்ணொருவர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாக பிரதேச சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உள்ளுர் மக்கள் அச்சத்துடனும் பீதியுடனும் காணப்படுகின்றனர்.

இரு வார காலத்திற்குள் 3 மாணவர்கள் ,3 பெண்கள் உள்பட 8 பேர் உயரிழந்துள்ளர். 1200 பேர் வரை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சகங்கள் பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

மத்திய சுகாதார அமைச்சகம் டெங்கு ஓழிப்பு பிரிவு வெளியிட்டுள்ள தகவலில், இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை சுமார் 2200 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 25 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்