கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக மனோகர் பரிக்கர் நியமனம்

மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக அங்கம் வகித்த மனோகர் பரிக்கர் கோவா மாநிலத்தின் முதல்வராக அம்மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

படக்குறிப்பு,

கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக மனோகர் பரிக்கர் நியமனம்

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாரதீய ஜனதாவின் 13 எம்.எல்.ஏக்கள், மஹாராஷ்ட்ராவாதி கோமந்த கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள், கோவா முன்னணி கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள் மற்றும இரு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் என சட்டப்பேரவையில் பெரும்பான்மையை பெற தேவையான 21 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை மனோகர் பரிக்கர் ஆளுநரிடன் சமர்பித்ததாக கூறப்பிட்டுள்ளது.

மேலும், மனோகர் பரிக்கர் முதல்வராக பதவியேற்று 15 நாட்களுக்குள் சட்டசயை கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க பரிக்கரிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டதாக அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

கோவா மாநிலத்தில் மொத்தம் 40 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ஆளுங்கட்சியான பா.ஜ.க 13 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், கோவா முன்னணி கட்சி 3 தொகுதிகளிலும், மஹாராஷ்ட்ராவாதி கோமத்தக கட்சி 3 தொகுதிகளிலுமவெற்றிப்பெற்றன.

மேலும், இத்தேர்தலில் மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்