இலங்கை : டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

இலங்கையில் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

திருகோணமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 39 வயதான குடும்பஸ்தர் ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்..

இந்த பிரதேசத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 பெண்கள் உள்பட 9-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை மாவட்டத்தில், ஏனைய சில பிரதேசங்களிலும் டெங்கு காய்ச்சல் நோயாளர்கள் இனம் காணப்பட்டிருந்தாலும் கிண்ணியா பிரதேசத்தில் நிலைமை மோசமாக காணப்படுகின்றது.

இந்த பிரதேசத்தில் மட்டும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்தவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில், கொசுக்களை ஓழிப்பதற்கும், கழிவுகளை அகற்றுவதற்கும் சுகாதார துறையினரால் சிறப்பு செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, கிண்ணியா பிரதேசத்தில் இதுவரை பதிவாகியுள்ள 9 மரணங்களில் 3 மாணவர்களும் அடங்குவதாக சுகாதார துறை தகவல்கள் மூலம் அறிய வந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்