நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் விநியோக பிரச்சனை: திமுகவினர் ஆர்ப்பாட்டம்

  • 13 மார்ச் 2017

தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் சில அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகக் குறை கூறும் திமுகவினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

படத்தின் காப்புரிமை MK STALIN
Image caption கோப்புப் படம்

பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் கிடைக்கப்பெறாமல் பொது மக்கள் அவதியுற்றுள்ளதாக கூறும் அவர்கள், தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராடினார்கள்.

இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும், திமுகவின் செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி உள்ளிட்டோரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், இது போன்ற போராட்டங்களை திமுக தொடரும் என குறிப்பிட்டார்.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் இந்த போராட்டம் தேவையற்றது என்றார்.

Image caption எடப்பாடி பழனிசாமி

மேலும் 20,000 மெட்ரிக் டன் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக போராட்டத்தின் போது உரையாற்றிய திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி கூறும் போது, தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

தமிழகம் முழுவதும் சுமார் 34 ஆயிரம் நியாயவிலை கடைகளின் முன்பாக திமுகவினர் இன்று காலை திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில், திமுகவின் கட்சி நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவின் அனைத்து பிரிவுகளை சார்ந்தவர்களும் பங்கேற்றார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்