தற்கொலை செய்ய என் மகன் கோழை அல்ல, சாவில் மர்மம்: முத்துகிருஷ்ணன் தந்தை பேட்டி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது சாவில் மர்மம் இருப்பதாக தந்தை ஜீவானந்தம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

Image caption 'தற்கொலை செய்ய என் மகன் கோழை அல்ல'

ஜீவானந்தத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தனது மகன் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவன் என்றும், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையல்ல என்றும் தெரிவித்தார்.

மகனின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறிய அவர், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Image caption கதறியழும் முத்துகிருஷ்ணனின் உறவினர்கள்

"இரண்டு நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசினார். தேர்வு இருக்கிறது. அதை முடித்துவிட்டு வருகிறேன் என்று சொன்னார். அதன் பிறகு பேசவில்லை" என்றார்.

படத்தின் காப்புரிமை Facebook
Image caption முத்துகிருஷ்ணன்

"படிப்பதைத் தவிர வேறு எந்தப் பிரச்சனைக்கும் செல்ல மாட்டார். தகுதி அடிப்படையில்தான் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. நன்றாகப் படிப்பவர். நான் காவலாளியாகப் பணியாற்றுகிறேன். அவர் படித்து முடித்துவிட்டு வந்தால் எங்களுக்கு வாழ்க்கை கிடைக்கும் என்று நினைத்தோம்" என்றார்.

Image caption சோகத்தில் மூழ்கிய முத்துகிருஷ்ணனின் உறவினர்கள்

"அவரது சாவில் மர்மம் உள்ளது. எனக்கு நியாயம் வேண்டும்" என்றார் முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்