கோவா கடற்கரைக்கு அருகில் பெண் சடலம் மீட்பு: போலிஸார் தகவல்

கோவாவில் கடற்கரை ஒன்றிற்கு அருகில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணியின் சடலம் ஒன்றை கண்டெடுத்துள்ளதாக கோவா போலிஸார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோவா கடற்கரை (கோப்புப் படம்)

செவ்வாய்க்கிழமையன்று "ஆட்கள் நடமாட்டம் இல்லாத" பகுதியில் அந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர் 25 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கலாம் என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் பாஸ்போர்ட் மீட்கப்படவில்லை என்பதால் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் செய்திகளில் அவர் அயர்லாந்தைச் சேர்ந்தவர் என்ற செய்திகள் வெளியான பிறகு, அயர்லாந்தின் வெளிநாட்டு விவகாரங்கள் துறை மற்றும் டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் ஆகியவைகளுடன் இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளன

இது சந்தேகத்திற்குரிய மரணமாக போலிஸாரால் கருதப்படுகிறது; மேலும் அவர் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டாரா என்பதை கண்டறிய உடல் கூறு ஆய்வு செய்யப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் துணை கண்காணிப்பாளர் சேமி தவரே பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்