மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு

இரண்டு தினங்களுக்கு முன் தற்கொலை செய்து இறந்துபோனதாக கூறப்பட்ட, புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் பிரதே பரிசோதனைக்கு பிறகு அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை FACEBOOK

இறந்த மாணவர் முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம் வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதே பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது என்று முத்துகிருஷ்ணனின் நண்பர் விஜய் அமிர்தராஜ் பிபிசியிடம் தெரிவித்தார்.

''பிரதே பரிசோதனை நடப்பதற்கு முன், முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தத்திடம் வீடியோ பதிவு செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. அவர் அதை பார்க்கவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் அவர் கேட்டதுபோல அவரது சார்பில் இரண்டு மருத்துவர்கள் அதில் பங்குபெறவேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது,'' என்றார் விஜய் அமிர்தராஜ்.

அவர் மேலும் பிரதே பரிசோதனை தொடர்பான தகவல்கள் எதுவும் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை என்றும் முத்துகிருஷ்ணனின் உடல் அவரது சொந்த ஊரான சேலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் தனது மகனின் மரணத்தில் மர்மம் உள்ளதால், இது தொடர்பாக வழக்கு தொடரப்போவதாக ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.

முத்துகிருஷ்ணன்: பாதியில் கலைந்த ஐஏஎஸ் கனவு

முத்துகிருஷ்ணன் மரணம் கொலையா, தற்கொலையா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்