கோவா: பாலியல் வல்லுறவுக்கு ஆளான அயர்லாந்து பெண்

  • 17 மார்ச் 2017

செவ்வாய்க்கிழமை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள அயர்லாந்து பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள கோவா மாநில காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Image caption அயர்லாந்து சுற்றுலா பயணி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது

இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதான இந்த பெண், விடுமுறையில் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்கு வந்தவர் ஆவார். இவருடைய உடல் வியாழக்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டிருக்கும் நபர் மீது ஏற்கெனவே கொலை குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவுகள்படி பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கோவா கடற்கரைக்கு அருகில் பெண் சடலம் மீட்பு: போலிஸார் தகவல்

பதின்ம வயதினருக்கு பாலியல் குறித்து பக்குவமாகச் சொல்லும் கையேடு தயார்

இந்த பெண்ணின் சலடம் இந்த மாநிலத்தின் தென் மேற்கு பகுதியிலுள்ள வயல்வெளி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது.

அதே நாள் 24 வயதான ஒருவர் இந்த பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

குற்றம்சாட்டப்பட்டவரோடு கொல்லப்பட்ட பெண் நடந்து சென்று கொண்டிருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவு காணொளியை வைத்து முக்கிய குற்றவாளியை கைது செய்திருப்பதாக நம்புகின்ற காவல்துறையினர் அதற்கான சான்றுகளை திரட்டி வருகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு:

இந்தியாவின் தடகள விளையாட்டு வீரர் மீது பாலியல் தாக்குதல் வழக்கு

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தை குடியேறிகள்: ஐ.நா., எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்