தனிக்கட்சி துவங்குகிறார் தீபாவின் கணவர்

  • 17 மார்ச் 2017

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஏற்கனவே அரசியல் அமைப்பு ஒன்றை நடத்திவரும் நிலையில், தான் தனியாக கட்சி துவங்கப்போவதாக அவரது கணவர் மாதவன் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Arun Sankar
Image caption ஜெயலலிதா மறைவை அடுத்து தொடரும் மாற்றங்கள்

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான தீபா, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற பெயரில் அமைப்பு ஒன்றைத் துவங்கினார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தீபாவின் வீட்டின் முன்பாக தினமும் ஆதரவாளர்கள் குவிந்துவந்த நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதற்குப் பிறகு அந்த அமைப்பின் பொருளாளராக தான் இருக்கப்போவதாகவும் தலைவராக ஆர். சரண்யாவையும் மாநிலச் செயலாளராக ராஜா என்பவரையும் அறிவித்தார். அவர்கள் தனது நண்பர்கள் என்றும் தீபா தெரிவித்தார்.

ஆனால், இதற்கு அவரது ஆதரவாளர்களிடம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. பல்வேறு பதவிகளுக்குப் பொறுப்பாளர்களை நியமிப்பதிலும் குழப்பம் நிலவியது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று இரவு எட்டரை மணியளவில் ஜெயலிதாவின் சமாதிக்கு வந்த தீபாவின் கணவர் மாதவன், தீபா பேரவையிலிருந்து விலகிவிட்டதாகவும் தனியாக கட்சி துவங்கப்போவதாகவும் தெரிவித்தார்.

தீபா தீய சக்திகளின் பிடியில் இருப்பதாகவும் ஆனால், தனிப்பட்ட முறையில் அவருடன் கருத்து வேறுபாடு ஏதும் இல்லையென்றும் அவர் கூறினார்.

ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக தீபா அறிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்