உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத்தை பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை WWW.YOGIADITYANATH.IN
Image caption யோகி ஆதித்யநாத்

இவர், கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து ஐந்தாவது முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினேஷ் சர்மா மற்றும் கேஷவ் பிரசாத் மெளர்யா ஆகிய இருவரும் துணை முதலமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, லக்னெளவில் இருந்து பி.பி.சி செய்தியாளர் தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று, வரலாற்று வெற்றியைப் பெற்றது. இதன் மூலம், பாரதீய ஜனதா கட்சி தேசிய அளவில் தனது நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்கு ஒரு பெரிய ஆயுதம் கிடைத்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்