டெல்லி மாருதி ஆலை விவகாரம்: 13 பேருக்கு ஆயுள் தண்டனை

  • 18 மார்ச் 2017

2012 ஆம் ஆண்டில், டெல்லிக்கு அருகில் இருக்கும் மாருதி ஆலையின் மூத்த மேலாளரை கொலைசெய்த குற்றச்சாட்டை உறுதி செய்த இந்திய நீதிமன்றம், 13 ஊழியர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை MANAN VATSYAYANA/AFP/Getty Images

மாருதி சுசூகி ஆலையில் தீ வைத்தது மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக, வேறு நான்கு பணியாளர்களுக்கு ஐந்து ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் மற்றும் பணி நியமனம் தொடர்பாக நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மற்றும் மேலாளர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, அங்கு வன்முறை வெடித்தது.

ஜப்பானின் சுசூகி நிறுவனத்தின் அதிக பங்கு இருக்கும் மாருதி சுசூகி, இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாகும்.

இந்த சம்பவத்தில் 13 பேர் மீது கொலைக் குற்றம் உட்பட மொத்தம் 31 தொழிலாளர்கள் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதி செய்தது. தண்டனை விதிக்கப்பட்டவர்களைத் தவிர எஞ்சியுள்ள 14 பேரும் சனிக்கிழமையன்று சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்