அமைச்சர்கள் தேர்வுக்கு அடிப்படை என்ன?

  • 19 மார்ச் 2017

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இன்று சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.துணை முதலமைச்சர்களாக கேஷவ் பிரசாத் மெளர்யா மற்றும் தினேஷ் ஷர்மா பதவியேற்றுக் கொண்டார்கள்.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

இவர்களைத் தவிர 22 கேபினட் அமைச்சர்களும், 24 பேர் இணையமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

லக்னெளவில் கன்ஷிராம் நினைவுப்பூங்காவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உட்பட பல மாநில முதலமைச்சர்களும், பாரதீய ஜனதா கட்சியின் பல மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை மற்றும் பதவியேற்பு விழா குறித்து ஒரு கண்ணோட்டம்:

• உத்தரப்பிரதேச மாநில சரித்திரத்திலேயே முதன்முறையாக இரண்டு துணை முதலமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

• முதலமைச்சரும், துணை முதலமைச்சர்கள் இருவரும் சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவையில் உறுப்பினர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

• தாக்கூர், பிராமணர், பிற்படுத்தப்பட்டோர் என பலதரப்பு வாக்காளர்களை கவரும் விதமாக, முறையே யோகி ஆதித்யநாத், தினேஷ் மற்றும் கேஷவ் ஆகியோருக்கு

படத்தின் காப்புரிமை Yogiadityanath

அமைச்சரவையின் தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

• மாநிலத்தின் 21 -வது முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் ஆதித்யநாத், ஐந்து முறை நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். "தில்லியில் மோதி,

உ.பி.யில் யோகி" என்பதே இந்த தேர்தலில் அவரது ஆதரவாளர்களின் முழக்கமாகவும், பிரசாரமாகவும் இருந்தது.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்தை முதலமைச்சராக்கியதன் பின்னணி என்ன?

• அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரே முஸ்லிம் அமைச்சர் மோஹ்சின் ராஜா. வழக்கமாக முஸ்லிம்களுக்கு கொடுக்கப்படும் சிறுபான்மை நலத்துறை மற்றும்

மேம்பாடு, வக்ஃப் வாரியம் போன்ற முக்கியத் துறைகளின் பொறுப்பு இவருக்கு வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

• முன்னாள் கிரிக்கெட் வீர்ர்கள் இருவர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். சேதன் செளஹான் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர். மோஹ்சின் ராஜா,

முன்னணி கிரிக்கெட் வீர்ர், ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடிவர்.

படத்தின் காப்புரிமை SAMIRATMAJ MISHRA

• ரீட்டா பகுகுணா ஜோஷி, குலாப் தேவி, ஸ்வாதி சிங், அனுபமா ஜெய்ஸ்வால், சங்கீத பல்வன் மற்றும் அர்ச்சனா பாண்டே என ஆறு பெண் அமைச்சர்கள்

அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

• சுவாமி பிரசாத் மெளர்யா மற்றும் ரீட்டா பகுகுணா ஆகிய இருவரும் காங்கிரஸில் இருந்து பாரதீய ஜனதா கட்சிக்கு வந்தவர்கள். இதில், ரீட்டா பகுகுணா, மாநில

காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தவர்.

யார் இந்த யோகி ஆதித்யநாத்?

• கட்சியின் மூத்த தலைவர் லால்ஜி டாண்டனின் மகன் அஷுதோஷ் டாண்டனும், முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கின் பேரன் சந்தீப் சிங்கும் அமைச்சர்களாக

நியமிக்கப்பட்டுள்ளனர்.

• முன்னாள் பிரதமர் லால் பஹாதுர் சாஸ்திரியின் பேரனும் அலகாபாத் மேற்குத் தொகுதி உறுப்பினருமான சித்தார்த் சிங் அமைச்சராகியுள்ளார்.

• உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதிக்கு அமைச்சரவையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது

படத்தின் காப்புரிமை SANJAY KANOJIA/AFP/Getty Images

• உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவையில் பல்தேவ் ஓலாக் என்ற சீக்கியர் இடம்பெற்றுள்ளார். ராம்பூரில் வெற்றிப் பெற்று லக்னெளவிற்கு வந்துள்ளார்.

• மாயாவதிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த தயாஷங்கரின் மனைவியும், முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக

வெற்றி பெற்றிருப்பவருமான ஸ்வாதி சிங்கிற்கு பதவி கிடைத்திருக்கிறது.

• 2013 ஆம் ஆண்டு, முசாஃபர்நகர் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் ராணாவும் மந்திரியாகியிருக்கிறார்.

• கூட்டணியில் இடம் பெற்றிருந்த சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் ஓம்பிரகாஷ் ராய்பர் அமைச்சராகியிருக்கிறார்.

• பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு நரேந்திர மோதியை சந்தித்த முலயாம்சிங் அவரின் காதில் எதோ கூறியதும், அகிலேஷ் யாதவுடன் மோதி கைகுலுக்கியதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்