அலைபேசி சேவையில் வோடஃபோன் - ஐடியா இணைப்பு : வாடிக்கையாளர்களுக்கு என்ன பலன்?

  • 20 மார்ச் 2017

பிரிட்டன் தொலைத் தொடர்பு பெருநிறுவனமான வோடஃபோன் நிறுவனம், தனது இந்திய வர்த்தகத்தை ஐடியா செல்லுலார் நிறுவனத்துடன் இணைக்கவுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த கூட்டு நிறுவனம் சுமார் 400 மில்லியன் வாடிக்கையாளர்களை பெறும், அது சந்தையில் 35% சதவீத பங்கை வகிக்கும் என அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது

இந்த ஒப்பந்தம் குறித்து பல மாதங்களாக எதிர்பார்ப்புகள் நிலவின; இந்த அறிவிப்பு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

புதிய தொலைத்தொடர்பு சேவையான ரிலையன்ஸ் ஜியோவினால் ஏற்பட்டுள்ள போட்டியை எதிர்கொள்ளவே இந்தக் கூட்டு நிறுவன முயற்சி ஏற்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ சேவை அறிமுகம், வோடஃபோன் இந்தியா, ஐடியா செலுலார் மற்றும் தற்போது சந்தையில் முன்னனியில் இருக்கும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்கள் சேவைகளில் விலைக் குறைப்பை ஏற்படுத்தும் சூழலுக்கு தள்ளியுள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பையடுத்து மும்பையில் ஐடியாவின் பங்குகள் நான்கு சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் முன்னனி அலைபேசி சேவைகள் ஜியோவின் வருகையால் "மோசமான விலைக் குறைப்பு போரில்" சிக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பத்திற்கும் மேற்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவின் ஒரு பில்லியன் அலைபேசி வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வருகின்றன.

குறைந்த விலையில் தங்கள் சேவையை வழங்கும் நிலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர்; அதனால் தங்களது லாபங்களில் அது எதிரோலித்து வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்