அதிர்ச்சியளிக்கும் முடிவு: ஓ.பி.எஸ்

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

Image caption ஓ.பி.எஸ். அணி

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வலுவான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்தும் தங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனது வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

கட்சியையும் ஆட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் அனைவரும் மகிழும் வண்ணம் மீட்டெடுப்போம் என ஓ. பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மைத்ரேயன், கட்சி தன் பக்கம்தான் இருக்கிறது என்று சசிகலா கூறிவந்த நிலையில், அப்படியில்லையென தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாகத் தெரிவிகிறது என்று குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்