தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

  • 23 மார்ச் 2017

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Image caption விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சென்னை ராமாவரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் இன்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் விஜயகாந்த் சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், வருடத்திற்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வதைப் போல இப்போதும் சென்றிருப்பதாகவும் ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மியாட் மருத்துவமனை வாயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது 65 வயதாகும் விஜயகாந்த் 2005-ஆம் ஆண்டில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கினார்.

2011-ஆம் ஆண்டில் இருந்து 2016-ஆம் ஆண்டு வரை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் விஜயகாந்த் செயல்பட்டார். 2016-ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட அக்கட்சியால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்