லண்டன் தாக்குதல்: 10 முக்கிய தகவல்கள்

  • 23 மார்ச் 2017

லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் மற்றும் நாடாளுமன்ற அவைகளுக்கு வெளியே நடந்த தாக்குதல் குறித்த 10 தகவல்கள்

லண்டன் தாக்குதலில் ஈடுபட்டவர் காலித் மசூத்

படத்தின் காப்புரிமை Getty Images
  • போலிஸாரால் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • தாக்குதல்தாரி, ஒரு போலிஸ் அதிகாரி, பொது மக்களில் இரண்டு பேர் என நான்கு பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
  • இச்சம்பவத்தில் பலியான போலிஸ் அதிகாரி, நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.
  • இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதாக முதலில் அடையாளம் காணப்பட்ட பெண்மனியின் பெயர் ஐஷா ஃபிராடே, 43 வயதாகும் அவர், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அவர், தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • நாடாளுமன்ற வளாகத்தை அடைவதற்கு முன்னர் தாக்குதல்தாரி வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தில் பொதுமக்கள் மீது தான் ஓட்டி வந்த வாகனத்தை கொண்டு மோதினார்.
  • தாக்குதல்தாரியின் பெயர் வெளியிடப்படவில்லை; அவர் போலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • தாக்குதல்தாரி சர்வதேச பயங்கரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர் என லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறையின் பொறுப்பு துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
  • பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, இது ஒரு "இழிந்த மற்றும் மோசமான செயல்" என விவரித்துள்ளார்.
  • கடந்த ஆண்டில் வாகனங்களை ஏற்றி மக்களை கொன்ற கொடும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், பிரிட்டனுக்கு தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளன.

பிரிட்டன் நாடாளுமன்ற தாக்குதல்: இஸ்லாமிய இயக்கங்களுக்கு தொடர்பு?

லண்டன் தாக்குதல்: 7 பேர் கைது; 6 வீடுகளில் சோதனை; 7 பேர் கவலைக்கிடம்

பிரிட்டன் நாடாளுமன்ற தாக்குதல்: படங்களில்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்