சென்னை நகர காவல்துறை ஆணையர் மாற்றம்

  • 25 மார்ச் 2017

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த எஸ். ஜார்ஜ் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய ஆணையராக குற்றப்பிரிவு புலனாய்வுத் துறையின் கூடுதல் டிஜிபியாக இருந்த கரண் சின்ஹா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், காவல்துறை ஆணையர் ஆளும் கட்சிக்கு சாதகமாகச் செயல்படுவார் என்பதால் அவரை அந்தப் பதவியிலிருந்து மாற்ற வேண்டுமென தி.மு.க. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் தமிழகத் தலைமைச் செயலருக்கும் கடிதம் எழுதியது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை அடுத்து, இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதியில் 82 வேட்புமனுக்கள் ஏற்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்