தானியங்கி கார்களை திரும்பப் பெற்றது ஊபர்

  • 26 மார்ச் 2017

அமெரிக்காவின் அரிஜோனாவில் ஊபர் நிறுவனத்தின் தானியங்கி கார் மற்றொரு வாகனத்தில் மோதிய விபத்திற்கு பிறகு ஊபர் தானியங்கி கார்களை திரும்பப் பெற்றது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption விபத்துக்குள்ளான தானியங்கி வாகனம்

அரிஜோனாவின் ஒரு சாலையில் சென்றுக்கொண்டிருந்த தானியங்கி கார் அதே பக்கத்தில் வந்த மற்றொரு காருடன் மோதியதில் மோசமாக சேதமடைந்த புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியானது.

அந்த வால்வோ எஸ்.யு.வி கார், விபத்து நடைபெற்றபோது, சுயமாக இயங்கிக் கொண்டிருந்த்து என்றும், இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் ஊபர் தெரிவித்தது.

இடப்புறமாக திரும்ப முயன்ற மற்றொரு வாகனம், ஊபரின் வாகனத்துக்கு இடமளிக்காமல் வந்ததால் அதன் மீது மோதியதாக அரிஜோனா மாகாணத்தின் டெம்ப் நகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

"ஓட்டுநரின் இருக்கையில் ஒருவர் இருந்தார். வாகனம் மோதியபோது, யாராவது அதனை கட்டுப்படுத்த முயன்றார்களா என்பது குறித்து தெரியவில்லை" என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஊபரின் சுயமாக இயங்கும் கார்களில், ஓட்டுனர் இடத்தில் எப்போதுமே ஒருவர் இருப்பார். தேவையான போது அவர் வாகனத்தை கட்டுப்படுத்தமுடியும்.

தானியங்கி கார்கள், மூன்று மாகாணங்களில் இயங்கி கொண்டிருந்த நிலையில், முதலில் அரிஜோனாவில் இருந்து அதை திரும்பப் பெற்றுக் கொண்ட ஊபர், பிறகு பென்சில்வேனியா மற்றும் கலிஃபோர்னியாவில் இருந்தும் திரும்பப் பெற்றுக்கொண்டது.

கார்களை வாடகைக்கு விடும் ஏப் சேவை குறித்த பணியிட நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த பலவித எதிர்மறை கருத்துகள் சில வாரங்களாக வெளியாகி வந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஊபரின் தலைவர் ஜெஃப் ஜோன்ஸ் உள்ளிட்ட பல செயல் அதிகாரிகள் அண்மையில் பதவி விலகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்