இந்தியச் சிறுவனின் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட பிரிட்டன் – இரான் பிரஜை விடுதலை

  • 27 மார்ச் 2017
படத்தின் காப்புரிமை NARGES ASHTARI
Image caption பிரிட்டன் - இரான் பிரஜையான நர்கெஸ் கல்பஸி அஷ்தரி

தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பிரிட்டன் - இரான் பிரஜையான நர்கெஸ் கல்பஸி அஷ்தரி என்னும் பெண், ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாவில் கலந்து கொண்ட, ஐந்து வயது சிறுவன் அசிம் ஜிலாகரா காணமல் போனார். 2014 ஆம் நடந்த இந்த சம்பவத்தில் சிறுவன் இறந்து போன நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அவர், ஓராண்டு காலம் சிறை வாசத்தையும் அனுபவித்தார்.

அசிம் வேகமான வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்பட்டது, சிறுவனின் சடலம் கிடைக்கவில்லை.

பிற செய்திகள்

ரஷ்ய பிரதமருக்கு எதிராக போராடியவர்கள் கைது; அமெரிக்கா கண்டனம்

பாலியல் வல்லுறவின்போது பெண் கூக்குரல் எழுப்பாததால் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை

தன்னுடைய கவனக்குறைவால் தான் சிறுவன் மரணமடைந்தான் என்ற குற்றச்சாட்டை 28 வயது கல்பஸி மறுத்தார். முறையீட்டின் மீதான தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருந்த அவர், ஜாமீன் விடுதலையில் இருக்கிறார்.

சம்பவம் நடந்த தினமே, சிறுவனின் மரணம் குறித்து காவல்துறையினரிடம் அறிக்கை அளித்துவிட்டதாக கூறும் கல்பஸி, ஆனால் ஒரு மாதம் கழித்து காவல்துறையினர், சிறுவனை அவர் தான் ஆற்றில் தூக்கி வீசியதாக புகார் பதிவு செய்தனர்.

படத்தின் காப்புரிமை NARGES ASHTARI
Image caption நர்கெஸ் கல்பஸி அஷ்தரி 2011 ஆண்டிலிருந்து இந்தியாவில் பணியாற்றிவருகிறார்

தனது மகனின் மரணத்திற்கு தன்னார்வ தொண்டரான கல்பஸி தான் காரணம் என்று ஜிலாகராவின் தாய் குற்றம் சாட்டிய போதிலும், உள்ளூர் ஊழலால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சம்பவத்திற்கு பிறகு உள்ளூர் அதிகாரிகளுக்கு தான் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் பிரச்சனையை எதிர்கொள்வதாக அஷ்தாரி கூறுகிறார்.

விசாரணை காலத்தில் கல்பஸி இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என்று விதிக்கப்பட்ட தடை, சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவன்ங்களின் கவனத்தை ஈர்த்தது. கல்பஸிக்கு ஆதரவான ஆன்லைன் மனுவில் இலட்சக்கணக்கான கையெழுத்துக்கள் போடப்பட்டது.

செல்வாக்கு பெற்ற, சக்திவாய்ந்த மக்கள் குழுவிடம் இருந்து மிகவும் மோசமான முறையில் துன்புறுத்தப்பட்டதாக கல்பஸி தனது ஆன்லைன் மனுவில் எழுதியிருக்கிறார்.

வழக்கில் இருந்து நர்கெஸ் கல்பஸி அஷ்தரி விடுக்கப்பட்டதை, இரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவேத் ஜரிஃப் வரவேற்றிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை NARGES ASHTARI
Image caption 2015 ஆம் ஆண்டு வேலை வாய்ப்பை உருவாக்க 20 ரிஃஷாக்களை வாங்கி தந்தார்

அவர், "இரானிய பெண் கல்பஸி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். கல்பஸிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பொறுமையும், விடாமுயற்சியும் போற்றத்தக்கது. அவருக்கு ஆதரவளித்த சகா பணியாளர்களுக்கும், (இரானிய) மக்கள் பிரச்சாரத்திற்கும் நன்றி" என்று தனது இன்ஸ்ட்ராகிரம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

இரானில் பிறந்த நர்கெஸ் கல்பஸி அஷ்தரி, நான்கு வயதில் பிரிட்டனுக்கு சென்றார். பெற்றோர்களை இழந்த அவர், தனது அத்தையுடன் கனாடாவில் வாழ்ந்துவந்தார்.

இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான ஒடிசாவில் இருக்கும் முகுந்தாபுருக்கு 2011 ஆம் ஆண்டு வந்த கல்பஸி, அனாதை குழந்தைகளுக்கான அறக்கட்டளை ஒன்றை நிறுவினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்