இறைச்சிக் கூடங்களின் இந்து முதலாளிகள் என்ன சொல்கிறார்கள்?

  • 28 மார்ச் 2017

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சில இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டன. சட்டத்துக்கு புறம்பாக இயங்கி வந்த இறைச்சிக் கூடங்களே மூடப்படுவதாக அரசு கூறுகிறது.

படத்தின் காப்புரிமை Thinkstock
Image caption உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சில இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டன

இது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரைக் குறிவைத்து எடுக்கப்படும் நடவடிக்கை என பொதுமக்கள் கருதுகின்றனர்.

உண்மை என்ன?

இந்தியாவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்களில் பத்து பேர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்.

மத்திய வர்த்தக அமைச்சகத்தின், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (APEDA) அனுமதி பெற்ற இறைச்சிக் கூடங்களின் எண்ணிக்கை மொத்தம் 74. அதில் பத்து இறைச்சிக் கூடங்கள் இந்துக்களுக்கு சொந்தமானவை.

நாட்டின் மிகப்பெரிய மற்றும் நவீன இறைச்சிக் கூடங்கள் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு சொந்தமானது.

உ.பி.யில் இறைச்சிக் கடைகள் மீதும் இறுகும் பிடி: `பின்னணியில் இருப்பது சட்டமா, மதமா?’

யோகி ஆதித்யநாத்தை முதலமைச்சராக்கியதன் பின்னணி என்ன?

அல் கபீர்

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம், ருத்ரம் கிராமத்தில் தான் நம் நாட்டின் மிகப்பெரிய இறைச்சிக் கூடம் அமைந்திருக்கிறது. சுமார் 400 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் இந்த மிகப்பெரிய இறைச்சிக் கூடத்தின் உரிமையாளர் சதீஷ் சபர்வால். அல் கபீர் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவெட் லிமிடெட் இந்த இறைச்சிக் கூடத்தை இயக்குகிறது.

படத்தின் காப்புரிமை AL KABEER.COM
Image caption 400 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது அல் கபீர் இறைச்சிக் கூடம்

மும்பையின் நாரிமன் பாயிண்டில் தலைமை அலுவகத்தை கொண்ட இந்த நிறுவனம், மத்திய-கிழக்கு நாடுகளுக்குக் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கிறது.

நம் நாட்டின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் இது. மத்திய-கிழக்கு நாடுகளில் பல இடங்களில் இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் உள்ளன.

துபை, அபு-தாபி, குவைத், ஜெட்டா, தம்ம்ம், மதீனா, ரியாத், கர்மிஷ், சித்ரா, மஸ்கட், தோஹா ஆகிய இடங்களில் அல் கபீர் நிறுவனத்தின் அலுவலகங்கள் உள்ளன.

துபை அலுவலகத்தில் இருந்த நிறுவனத்தின் மத்திய-கிழக்கு நாடுகளின் தலைவர் சுரேஷ் சபர்வாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, "மதமும், வணிகமும் இரண்டு வெவ்வேறு விசயங்கள். இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ளக்கூடாது. ஒரு இந்து மாட்டிறைச்சித் தொழிலிலும், ஒரு இஸ்லாமியர் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டால் அதில் என்ன தவறு இருக்கிறது?" என்றார்.

அல் கபீர் நிறுவனத்தின் கடந்த ஆண்டு வர்த்தகம் சுமார் 650 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை AFP

அரேபியன் எக்ஸ்போர்ட்ஸ்

அரேபியன் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் கபூர். மும்பையில் இருக்கும் இவரது அலுவலகம் ரஷ்ய பாணியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் மாட்டிறைச்சி மற்றும் பிற இறைச்சிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் விர்னத் நாக்நாத், குட்முலே, விகாஸ் மாருதி ஷிந்தே, அஷோக் நாரங்க் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

`முஸ்லிம்கள் மட்டுமன்றி, ஹிந்துக்களும் வேலையிழப்பார்கள்'

யார் இந்த யோகி ஆதித்யநாத்?

எம்.கே.ஆர்.எக்ஸ்போர்ட்ஸ்

எம்.கே.ஆர். ஃப்ரோஸன் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவெட் லிமிடெடின் உரிமையாளர் மதன் ஏவட். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தில்லியில் அமைந்துள்ளது.

ஏவட் கோல்ட் ஸ்டோரேஜ் பிரைவெட் லிமிடெடின் இறைச்சிக் கூடம், பஞ்சாபின் மொஹாலி மாவட்டத்தின் சமேலி கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் உரிமையாளர் சனி ஏவட்.

படத்தின் காப்புரிமை MKR COLD STORAGES PVT LTD
Image caption பஞ்சாபில் அமைந்துள்ளது எம்.கே.ஆர்.எக்ஸ்போர்ட்ஸ்

அல் நூர் எக்ஸ்போர்ட்ஸ்

அல் நூர் எக்ஸ்போர்ட்சின் உரிமையாளர் சுனில் சூத். இந்த நிறுவனத்தின் தலமை அலுவலகம் தில்லியில் உள்ளது. ஆனல் இந்த நிறுவனத்தின் இறைச்சிக் கூடமும், பதப்படுத்தும் ஆலையும் உத்தர்பிரதேசின் முஜாஃபர்புரின் ஷேர்நகரில் அமைந்துள்ளது.

இதைத் தவிர மீரட் மற்றும் மும்பையில் எட்டு ஆலைகள் உள்ளன. அஜய் சூத் இந்த நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரர். 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 35 நாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கிறது.

படத்தின் காப்புரிமை ALNOOREXPORTS.COM

ஏ.ஓ.வி எக்ஸ்போர்ட்ஸ்

ஏ.ஓ.வி எக்ஸ்போர்ட்ஸ் பிரைவெட் லிமிடெடின் இறைச்சிக் கூடம் உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில் அமைந்திருக்கிறது. நிறுவனத்திற்கு இறைச்சி பதப்படுத்தும் ஆலையும் இருக்கிறது. இதன் உரிமையாளர் ஓ.பி.அரோரா.

200 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் இந்த ஆலையின் முக்கிய ஏற்றுமதி மாட்டிறைச்சி தான். நிறுவனத்தின் தலைமை அலுவலகம் நொய்டாவில் அமைந்துள்ளது.

அபிஷேக் அரோரா, ஏ.வோ.வி அக்ரோ ஃபுட்ஸின் உரிமையாளர். நிறுவனத்தின் ஆலை மேவாரில் உள்ளது.

ஸ்டாண்டர்ட் ஃப்ரோஜன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கமல் வர்மா. இந்த நிறுவனத்தின் இறைச்சிக் கூடம் உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில், சாந்த்புரில் அமைந்திருக்கிறது. இதன் அலுவலகம் ஹாபுடில் ஷிவ்புரியில் அமைந்துள்ளது.

பொன்னே ப்ராடக்ட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ்

பொன்னே ப்ராடக்ட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.சாஸ்தி குமார்.

இந்த நிறுவனம், மாட்டிறைச்சியைத் தவிர, கோழி இறைச்சியையும் ஏற்றுமதி செய்கிறது. இந்த நிறுவனம், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம், பரமத்தி சாலையில் அமைந்துள்ளது.

அஸ்வினி ஆக்ரோ எக்ஸ்போர்ட்ஸ்

அஸ்வினி ஆக்ரோ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டின், சென்னை அடையாறு பகுதியில் உள்ள காந்தி நகரில் உள்ளது. தொழிலையையும், மதத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு பார்க்கிறார், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேந்திரன்.

"மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம், அதை ஒருவரின் தொழிலோடு இணைத்துப் பார்க்கக்கூடாது" என்பது ராஜேந்திரனின் கருத்து.

பல நேரங்களில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக கூறும் ராஜேந்திரன், உள்ளூர் அதிகாரிகள் தொல்லை கொடுப்பதாக சொல்கிறார்.

மகாராஷ்ட்ரா ஃபுட்ஸ் ப்ராஸசிங்

மதமும், தொழிலும் வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியவை. இரண்டையும் ஒன்றாக பார்க்க்க்கூடாது என்கிறார் மகாராஷ்ட்ரா ஃபுட்ஸ் ப்ராஸசிங் அண்டு கோல்டு ஸ்டோரேஜிங் நிறுவனத்தின் பங்குதாரர் சன்னி கட்டர்.

நான் ஒரு இந்து, மாட்டிறைச்சித் தொழிலில் ஈடுபட்டிருக்கிறேன். அதனால் என்ன? இந்துக்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுவது தவறல்ல என்று சொல்கிறார் சன்னி கட்டர். நான் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பதால் நான் மோசமான இந்து என்று அர்த்தமல்ல என்கிறார் அவர்.

இந்த நிறுவனத்தின் இறைச்சிக் கூடம் மகாராஷ்ட்ரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் ஃபல்டனில் இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Thinkstock
Image caption இறைச்சி தொழிலில் இந்து-முஸ்லீம் வேறுபாடு இல்லை

இவற்றைத் தவிர, பல இந்துக்களின் நிறுவனங்கள் மாட்டிறைச்சி ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டுள்ளன. அவற்றிடம் இறைச்சிக் கூடங்கள் இல்லை என்றாலும், அவை, இறைச்சியை பதப்படுத்தி, பேக்கிங் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளன. கனக் டிரேடர்சும் அப்படி ஒரு நிறுவனம் தான். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் சுவாமி சொல்கிறார், "இந்தத் தொழிலில் இந்து-முஸ்லீம் என்ற எந்தவிதமான மத வேறுபாடும் கிடையாது. இரண்டு மதங்களை சேர்ந்தவர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்துவாக இருப்பதால் எந்த வித்தியாசமும் இல்லை".

`உத்தம’ பிரதேசத்தில் “இனி மூச்சு விடுவதற்கும் சிக்கல்தான்”

இறைச்சிக் கூடங்கள் மூடப்படுவதால் இந்து-முஸ்லீம் என இரு தரப்பினருமே பாதிக்கப்படுவார்கள் என்று அவர் சொல்கிறார்.

நடுத்தர வர்கத்தை சேர்ந்த இந்துக்களில் பெரும்பான்மையானோர், முதலாளிகளாகவோ, உரிமையாளர்களாகவோ இல்லாவிட்டாலும், மாட்டிறைச்சித் தொழிலில், நிர்வாகம், தர மேலாண்மை, ஆலோசாகர் மற்றும் பல்வேறு பதவிகளில் இருக்கின்ற்னர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்