உத்தரப் பிரதேசத்தில் ஆப்ரிக்க மக்களுக்கு எதிராக வன்முறை

  • 28 மார்ச் 2017

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆப்ரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கடந்த வருடம் ஆப்ரிக்க மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்த்து நடந்த போராட்டம்

திங்களன்று, கிரோட்டர் நொய்டா பகுதியில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த போராட்டம் வன்முறையாக மாறியதில், நைஜீரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடத்தப்பட்டதாகவும் மேலும் பிற ஆப்ரிக்கர்கள் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த உயிரிழந்த பையன் அதிகமாக போதை பொருள் உட்கொண்டதே இதற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது ; மேலும் ஆப்ரிக்கர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இது தொடர்பாக ஐந்து பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை @SushmaSwaraj

நைஜீரியப் பெண் கடத்தப்பட்டதாக கூறப்படுவதை போலிசார் மறுத்துள்ளனர். இம்மாதிரியான செய்திகள் பதற்றத்தை அதிகரிக்கப் பரப்பப்படுகிறது என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வெள்ளியன்று அந்நகரில் உள்ள நைஜீரிய மக்கள் நரமாமிசம் உண்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு தாக்கப்பட்டனர்.

கடந்த வருடம் தலைநகர் டெல்லியில் ஆப்ரிக்கர்கள் மீது பல அடுத்தடுத்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்