உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் நடவடிக்கை, சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூட உத்தரவு

ஜார்கண்ட் மாநில அரசு, அடுத்த 72 மணி நேரத்தில், சட்டத்திற்குப் புறம்பான இறைச்சிக் கூடங்களை மூட உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மாநில உள்துறை செயலாளர் எஸ்கேஜி ரஹாடே, மாநிலத்தின் அனைத்து ஏ.எஸ்.பி, எஸ்.டி.ஓ மற்றும் அனைத்து நகராட்சிகளுக்கும் இது குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து உள்ளூர் பத்திரிகையாளர் ரவி பிரகாஷ், அஞ்சுமான் இஸ்லாமியா தலைவர் மெளலானா இக்ரார் அஹ்மத்தை தொடர்பு கொண்டார். அப்போது அவர், "இந்த உத்தரவை ராம நவமி மற்றும் சர்ஹுல் -க்கு பிறகு நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும். ராஞ்சியில் ஓர் இறைச்சிக் கூடத்திடம் உரிமம் இல்லை. அங்கு உரிமம் பெற்ற இரண்டு இறைச்சிக் கூடங்கள் தான் உள்ளன. அதையும் அரசு நவீனப்படுத்தவில்லை" என்று தெரிவித்தார்.

இறைச்சிக் கூடங்களின் இந்து முதலாளிகள் என்ன சொல்கிறார்கள்?

இந்த விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது. அரசு உண்மையில் முறையாக நடக்க விரும்பினால், முதலில் நாடு முழுவதும் அல்லது குறைந்தப்பட்சம் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மாட்டிறைச்சி வணிகத்தை தடை செய்யட்டும். வியாபாரத்தை தடுப்பதற்கு முன்பு, அரசு இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வேலைவாய்புக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தமது அமைப்புடன் தொடர்புடையவர்களிடம் செவ்வாயன்று நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்தாலோசித்த பிறகு இது குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும் என்றார்.

`முஸ்லிம்கள் மட்டுமன்றி, ஹிந்துக்களும் வேலையிழப்பார்கள்'

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத இறைச்சிக்கூடங்கள் இல்லை என்று மாநிலத்தில் உள்ள காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

உ.பி.யில் இறைச்சிக் கடைகள் மீதும் இறுகும் பிடி: `பின்னணியில் இருப்பது சட்டமா, மதமா?’

இந்த விவகாரத்தை கவனிப்பதற்காக ஒரு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்தார். அரசின் உத்தரவை எஸ்.டி.ஓ அமல்படுத்துவதை அவர் மேற்பார்வையிடுவார்.

யோகி அரசின் அதிரடியால் சிங்கங்களுக்கும் சிக்கல்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்