பத்மஸ்ரீ விருது பெறும் நானம்மாள், 98 வயதிலும் யோகா செய்யும் வீடியோ

பத்மஸ்ரீ விருது பெறும் நானம்மாள், 98 வயதிலும் யோகா செய்யும் வீடியோ

கோயம்புத்தூரைச் சேர்ந்த 98 வயதான நானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருதினை அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த வயதிலும் அவர் தீவிர யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு, கற்றுக்கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக முன்பே ஜனாதிபதியின் பெண் சக்தி விருதை வென்றிருக்கும் நானம்மாள், இந்தியாவின் மிக வயதான யோகா ஆசிரியராவார்.

கடந்த வருடம் கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும், தற்போதும் கடினமான பயிற்சிகள் செய்வதை அவர் விடவில்லை. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக யோகா பயிற்சியைச் செய்துவரும் நானம்மாளின் குடும்பத்தைச் சேர்ந்த 36 பேர் தற்போது யோகாவைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :