மைல் கற்களில் இந்தி எழுத்து: தி.மு.க., பா.ம.க எதிர்ப்பு

  • 31 மார்ச் 2017

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஊர்களின் பெயர்ப் பலகைகள், மைல் கற்கள் ஆகியவற்றில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி பயன்படுத்தப்படுவதற்கு தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை DMK

வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 75 மற்றும் 77 ஆகியவற்றில் உள்ள பெயர்ப் பலகைகளிலும் மைல் கற்களிலும் உள்ள ஊரின் பெயர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். ஆனால், கடந்த சில வாரங்களாக ஆங்கிலத்தில் உள்ள பெயர்கள் மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக இந்தியில் பெயர்கள் எழுதப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வந்தே மாதரம் பாடினால்தான் கவுன்சிலர் பதவி தப்புமா?

இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், "ஆட்சிக்கு வந்த மூன்று வருடத்திற்குள் மாநில மொழிகளின் சமன்பாட்டையும் முக்கியத்துவத்தையும் குறைத்து இந்தி திணிப்பிற்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது" என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும் தமிழகத்தில் "இந்தி திணிப்பு எதிர்ப்பு" இன்னும் முனைமழுங்கிப் போகவில்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டுமென்றும் இது தொடருமானால் புதிதாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

மாதவிலக்கு காலத்தில் பெண்கள் தூய்மை இழக்கிறார்களா?

"வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனை, தோல் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு மைல் கற்களில் எழுதப்பட்டுள்ள எந்த மொழியும் தெரியாது என்பதால் அவர்கள் எந்த ஊரை நோக்கிச் செல்கிறோம் என்பது தெரியாமல் தடுமாறுகின்றனர்" என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது திட்டமிட்ட இந்தித் திணிப்பு என்றும் நெடுஞ்சாலைகளில் எழுதப்பட்டுள்ள இந்தி பெயர்களை அகற்றும்படி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு மத்திய அரசு ஆணையிடாவிட்டால், மிகப் பெரிய போராட்டத்தை நடத்தப்போவதாக ராமதாஸ் கூறியிருக்கிறார்.

யோகியின் அடுத்த இலக்கு என்ன?

"என் மகன் விட்டுச் சென்ற பிரசாரத்தை தொடர்வேன்": ஃபாரூக்கின் தந்தை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்