தமிழக விவசாயிகள் போராட்டத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

  • 31 மார்ச் 2017

டெல்லியில் கடந்த 18 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜந்தர் மந்தர் பகுதியில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் சில பெண்கள் உள்பட சுமார் 100 பேர் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக விவசாயிகள் (புகைப்படத் தொகுப்பு )

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்நிலையில், இன்று பிற்பகல், ராகுல் காந்தி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிக்கு வந்தார். அங்கு விவசாயிகளுடன் அமர்ந்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பிறகு விவசாயிகளிடம் பேசும்போது, அவர்களது போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும், மத்திய அரசு அக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்தப் போராட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

ரஜினிகாந்த் - மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் சந்திப்பு

இதுகுறித்து பின்னர் பிபிசி தமிழோசையிடம் பேசிய தமிழக திருநாவுக்கரசர், பிரதமர் நரேந்திர மோதி, விவசாயிகளைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், இன்சூரன்ஸ் உள்ளிட்ட, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்திய ராகுல் காந்தி, 18 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்து வருத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அகில இந்திய அளவில், விவசாயிகளின் இந்தப் பிரச்சனையை காங்கிரஸ் கட்சி எடுத்துச் செல்லும் என்றும், அவர்களது போராட்டத்துக்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்கப்படும் என்றும் ராகுல் காந்தி உறுதியளித்ததாக திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

காணொளி: கோவணம் கெத்தான உடை - இயக்குனர் பாண்டியராஜ்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கோட் சூட்டை விட கோவணம் கெத்து

மேலதிக தகவல்களுக்கு:

`விலங்குகளை வெட்டுவது மட்டும்தான் முஸ்லிம்கள், மற்றதெல்லாம் ஹிந்துக்கள் வேலை'

மாதவிலக்கு காலத்தில் பெண்கள் தூய்மை இழக்கிறார்களா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்