குஜராத்தில், மாடுகளைக் கொன்றால் இனி ஆயுள் சிறை, பசுவதை தொடர்பில் இந்தியாவில் முரண்பட்ட சட்டங்கள்

  • 1 ஏப்ரல் 2017

குஜராத் மாநில சட்டப்பேரவையில், வெள்ளிக்கிழமையன்று விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011 -ஐ நிறைவேறியது. (2011 -ஆம் ஆண்டின் விலங்குகள் பாதுகாப்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த சட்டத் திருத்தத்திற்கு பிறகு, குஜராத்தில் மாடுகளை கொன்றால் ஆயுள் தண்டனையை கிடைக்கும்.

இதைத் தவிர, மாட்டிறைச்சியை, கொண்டு வருவது, வாங்கிச் செல்வது, மாடுகளை வெட்டுபவர்களுக்கு ஒரு லட்சம் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தற்போது நடைமுறையில் இருக்கும் 2011 ஆம் ஆண்டு சட்டத்தின்படி, மாடுகளை கொண்டுவருவது, வாங்கிச் செல்வது, வெட்டுவது மற்றும் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டம் அமலுக்கு வந்த காலகட்டத்தில் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோதி.

புதிய சட்டத் திருத்தம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

இந்திய கலாச்சாரம்

"நமது இந்தியக் கலாச்சாரம் பசுவை புனிதமாக கருதுகிறது. மாநில மக்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று சொல்கிறார் குஜராத் மாநில உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா.

படத்தின் காப்புரிமை Getty Images

மாடுகளை கொல்பவர்களின் மீது "கடுமையான" நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் ரூபானி கூறுகிறார்.

புதிய சட்டத் திருத்தத்தின் படி, இது தொடர்பான அனைத்து குற்றங்களும் இனிமேல் சட்டவிரோதமானதாக கருதப்படும்.

மாட்டிறைச்சி கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களும் இந்த சட்டத்தின் படி பறிமுதல் செய்யப்படும்.

இந்தியாவில் உணவு பாசிச கலாச்சாரம் நிலவுகிறதா?

எந்தவித கட்டுப்பாடும் இல்லை

இந்தியாவில் 29 மாநிலங்களில் 11 மாநிலங்களில் பசு, காளை, எருது, கன்று ஆகியவற்றை வெட்டுவத்தற்கும், அவற்றின் இறைச்சிகளை உண்பதற்கும் எந்தவிதத் தடையும் இல்லை. மீதமுள்ள 18 மாநிலங்களில் மாடு வெட்டுவதற்கு முழுமையான அல்லது பகுதியளவு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்கள்த் தொகயில் 80 சதவிகித்திற்கும் அதிகமானோர் இந்துக்கள். அவர்கள் மாட்டை தெய்வமாக வணங்குபவர்கள். ஆனால், உலக நாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி மற்றும் மீன் ஆகியவற்றின் விலை மலிவாக இருப்பதால், ஏழை மக்களின் தினசரி உணவில் இவை முக்கிய இடம் பிடித்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக முஸ்லிம், கிறிஸ்துவர்கள், தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உணவில் இறைச்சி வகைகளே முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

பசுவதை தொடர்பாக மத்திய சட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில், பல தசாப்தங்களாக பல்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு சட்டங்கள் அமலில் இருக்கின்றன. மாநிலங்களில் மாட்டிறைச்சி தொடர்பான சட்டங்கள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்வோம்.

முழுத் தடை

உலக அளவில் மொத்த மாட்டிறைச்சி ஏற்றுமதி (மெட்ரிக் டன்)

மொத்த ஏற்றுமதி 94,39,000

பிரேஸில் 18,50,000

இந்தியா 18,50,000

ஆஸ்திரேலியா 13,8500

அமெரிக்கா 11,20,00

உதவி - beef2live.com

`இறைச்சி விற்பனைக்குத் தடை முஸ்லிம்களுக்கான தடையா?'

மாடு, கன்று, காளை, எருது ஆகியவற்றை இறைச்சிக்காக வெட்டுவது முழுமையான தடை விதித்திருக்கும் 11 மாநிலங்கள் - இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கஷ்மீர், ஹிமாசல்பிரதேஷ், பஞ்சாப், ஹரியாணா, உத்தராகண்ட், உத்தர்பிரதேஷ், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மத்யபிரதேஷ், சத்தீஸ்கர், மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தில்லி மற்றும் சண்டிகர்.

இங்கு பசுவதை தொடர்பாக கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. குறிப்பாக, ஹரியாணாவில் ஒரு லட்ச ரூபாய் அபராதம் மற்றும் பத்தாண்டுகால சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் பசுவதைக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும், ஐந்தாண்டு கால சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.

இருந்தபோதிலும், சத்தீஸ்கரைத் தவிர, அனைத்து மாநிலங்களிலும் எருமையை வெட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை.

பகுதித் தடை

பசுவதைக்கு முழுமையான தடை என்றால், மாடு மற்றும் கன்றை கொல்வதற்கு தடை. ஆனால், காளை, எருமைகளை வெட்டுவதற்கும், அதன் இறைச்சியை உணவாக பயன்படுத்தவும் தடையில்லை என்றபோதிலும், "வெட்டுவதற்கு உகந்தவை" என்ற சான்றிதழ் தேவைப்படும். மாட்டின் வயது, வேலைத்திறன், கன்று ஈனும் (இனவிருத்தி) திறன் என பல்வேறு அம்சங்களின் அடைப்படையில் இந்த சான்றிதழ் வழங்கப்படும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இருப்பினும், இந்த மாநிலங்களில் தண்டனையும் அபராதமும் குறைவாகவே இருக்கிறது. சிறை தண்டனை என்பது ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டு காலமும், அபராதம் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் தான்.

பீகார், ஜார்கண்ட், ஒரிசா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா ஆகிய எட்டு மாநிலங்களிலும், டாமன்-டையூ, தாத்ரா-நாகர் ஹவேலி, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் என நான்கு யூனியன் பிரதேசங்களிலும் பகுதித்தடை அமலில் உள்ளது.

எந்தவிதத் தடையும் இல்லாத மாநிலங்கள்

கேரளா, மேற்கு வங்கம், அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிஜோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய பத்து மாநிலங்களிலும், லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திலும் பசுவதை தொடர்பாக எந்த தடையுமில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

இங்கு மாடு, கன்று, காளை, எருது, எருமை ஆகியவற்றின் இறைச்சியை சந்தைகளில் விற்பனை செய்வதற்கும், சாப்பிடவும் எந்தவித தடையும் இல்லை.

"வெட்டுவதற்கு உகந்தவை" என்ற சான்றிதழ் பெற்றவற்றை, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் வெட்டுவதற்கு தடை இல்லை.

இந்த சான்றிதழ், 14 வயதுக்கு அதிகமான, இனப்பெருக்கம் செய்ய முடியாத, வேலை செய்ய இயலாத விலங்குகளுக்கு தான் கிடைக்கும்.

2011 ஆம் ஆண்டின் மக்கள்த்தொகை கணக்கெடுப்பின்படி, பல மாநிலங்களில், பழங்குடியின மக்களின் எண்ணிக்கை 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கிறது. இவற்றில் பல மாநிலங்களில் கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசத்தில் கசாப்பு கடை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்