ரஜினிகாந்த் - பிரதமர் நஜிப் சந்திப்பை புகழும் மலேசிய ஊடகங்கள்

  • 1 ஏப்ரல் 2017

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மலேசிய பிரதமர் மேற்கொண்டு வருகின்ற பயணத்தின்போது, வியாழக்கிழமை தமிழ்த் திரைப்பட நட்சத்திரம் ரஜினிகாந்தை பிரதமர் நஜிப் ரஸாக் சந்தித்ததை மலேசிய ஊடகங்கள் புகழ்ந்து செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்திய திரைப்பட நட்சத்திரம் ரஜினிகாந்துடன் நஜிப் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை மலேசியாவின் பிரபலமான செய்தித்தாளான மலாய் மெயில் முக்கியத்துவம் அளித்து வெளியிட்டுள்ளது.

"இந்திய தமிழ் சூப்பர் ஸ்டாருடன் இளைப்பாறும் நஜிப்" என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த செய்தியில், சந்திப்புக்கு பிறகு டிவிட்டர் பதிவில் தொடர்ந்த தோழமையுணர்வும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

பெண்களின் இரவுப்பணியை நிறுத்த கர்நாடக அரசு முயற்சி

"தமிழ் சூப்பர் ஸ்டாரின் இல்லத்தில் மகிழ்ச்சியான, நட்பார்ந்த சந்திப்பு இடம்பெற்றது" என்று நஜீப் தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கான @NajibRazak -ல் பதிவிட்டுள்ளதாக இந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

"யாருக்கு தான் @சூப்பர் ஸ்டார் ரஜினியை தெரியாது? அவரை இன்று நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி" என்ற பதிவோடு, அவர்கள் இருவரும் இருக்கின்ற புகைப்படத்தோடு நஜிப் மேலும் டிவிட்டர் செய்தி அனுப்பியுள்ளார்.

"தலைசிறந்த, நட்பார்ந்த மற்றும் மகிழ்ச்சியான நபரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தமிழ் திரைப்பட நட்சத்திரம் ரஜினிகாந்தை பற்றி குறிப்பிட்டு நஜிப் மீண்டும் டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.

சினிமா விமர்சனம்: டோரா

நஜிப்பை சந்தித்ததில் ரஜினிகாந்த் ஆச்சரியமடைந்ததாக தெரிவித்திருக்கும் இன்னொரு மலேசிய நாளேடான "த ஸ்டார்", பிரதரும். ரஜினிகாந்தும் இணைந்து எடுத்துகொண்ட செல்ஃபி புகைப்படம் டிவிட்டரில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை TWITTER

சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற கபாலி படத்தின் சில பகுதிகளை கடந்த ஆண்டு மலேசியாவில் காட்சிப்படுத்தியபோது, ரஜினிகாந்த் அந்நாட்டின் பிரதமரை சந்திக்க வேண்டும் என்ற ஆவலை தெரிவித்திருந்தார்.

கபாலி திரைப்படம் மாஃபியா தலைவர்களான கபாலீஸ்வரன் (ரஜினி ஏற்று நடித்த கதாபாத்திரம்) மற்றும் டோனி லீ (தைவான் நடிகர் வின்ஸ்டன் சாவ் ஏற்று நடித்த கதாபாத்திரம்) குழுக்களின் சண்டையை பற்றியதாக அமைகிறது.

"குற்றம் பலனளிக்காது" என்று திரைப்படத்தின் முடிவில் அறநெறி பாடம் ஒன்றை வழங்க மலேசிய தேசிய திரைப்படத் தணிக்கை வாரியம் கேட்டு கொண்ட பின்னர், வித்தியசமான முடிவோடு மலேசியாவில் கபாலி திரைப்படத்தின் சிறப்பு பதிப்பு வெளியானது.

முன்னதாக, மலாக்காவிலும், கோலாலம்பூரிலும் திரைப்படக் காட்சிப்படுத்தலின்போது, பெரும் மக்கள் கூட்டத்தை ரஜினிகாந்த் ஈர்த்திருந்தார்.

உள்ளூரில் மட்டுமா, உலகெங்கும் வாரிசு அரசியல்!

மலேசிய மற்றும் இந்திய மொழிகளில் எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் மலேசியாவிலும், இந்தியாவிலும் மாபெரும் வெற்றிப்படமாக விளங்கியது என்பதை ஃப்ரி மலேசியன் டுடே செய்தி பக்கம் அதனுடைய வாசகர்களுக்கு நினைவூட்டியுள்ளது.

கபாலி 2 ஆம் பாகத்தை திரைப்படமாக எடுப்பதற்கு எழுத்து பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், அதன் படப்பிடிப்பிற்கும் மலேசியா வருவதற்கு ரஜினிகாந்துக்கு நஜிப் அழைப்பு விடுத்துள்ளதாக அது மேலும் குறிப்பிடுகிறது.

படத்தின் காப்புரிமை TWITTER

ஆனால், அனைவரும் இது பற்றி மிகவும் உற்சாகம் அடைந்ததாகத் தெரியவில்லை.

தமிழ் நாட்டிலுள்ள ரஜினிகாந்தின் ஆதரவை தேடியுள்ள மலேசிய பிரதமர், இலங்கையில் தமிழர்கள் படுகின்ற துன்பங்களை ஏற்றுக்கொள்வதில் தோல்வியடைந்து விட்டாரே என்று மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சரும், நஜிபின் அரசியல் விமர்சகருமான பி. ராமசாமி, ஃப்ரி மலேசியா டுடே செய்தி பக்கத்தில் எழுதியுள்ளார்.

மலேசிய பிரதமர் நஜிப் தற்போது இந்தியாவில் ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கீழ்க்கண்ட செய்திகளைப் படிப்பதிலும் நீங்கள் ஆர்வம் காட்டலாம்:

இலங்கை பயணம் ரத்து: குழப்பத்தில் ரஜினி?

தற்கொலையைத் தடுக்கும் மின்விசிறி!

மாதவிலக்கு காலத்தில் பெண்கள் தூய்மை இழக்கிறார்களா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்