டெல்லியில் பெண் அமைச்சரை பின்தொடர்ந்த இளைஞர்கள்; சாதாரண பெண்களின் நிலை என்ன?

  • 2 ஏப்ரல் 2017

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானியை பின்தொடர்ந்து வந்த தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

படத்தின் காப்புரிமை AFP

சனிக்கிழமை மாலை, ஸ்மிரிதி இரானியின் காரை நான்கு பேர் பின் தொடர்வதாக அவரது அலுவலக பணியாளர்களில் ஒருவர் மாலை ஐந்து மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

உடைமாற்றும் இடத்தில் கேமரா - ஸ்மிரிதி இரானி புகார்

உடனடி நடவடிக்கை எடுத்த போலிஸ், அமெரிக்க தூதரகம் அருகே அவர்களை பிடித்து கைது செய்தது.

வசந்த் வில்லேஜ் என்ற பகுதியில் வசிக்கும் இந்த மாணவர்கள், சனிக்கிழமை மாலை நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விருந்தில் மது அருந்திவிட்டு வரும்போது, ஸ்மிரிதி இரானியைப் பார்த்ததும் அவரது காரை பின்தொடர்ந்துள்ளனர்.

மலிவு விலையில் கிடைத்த `காஸ்ட்லி' அதிர்ச்சி!

கொலம்பியா நிலச்சரிவில் 254 பேர் பலி: மீட்புப் பணிகள் தீவிரம்

மத்திய அமைச்சர் ஒருவருக்கே தில்லி போன்ற நகரில் பாதுகாப்பு இல்லை என்பது போன்ற விவாதங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவுகின்றன.

படத்தின் காப்புரிமை AFP

சமூக ஊடகங்களில் விவாதம்

"ஸ்மிரிதி இரானிக்கே தில்லியில் பாதுகாப்பு இல்லை. போலீஸ் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்றாலும், போலிஸ் மீது பயமாவது இருக்கவேண்டும். போலீஸ் மீதான அச்சமே போக்கிரிகளுக்கு இல்லை என்று தோன்றுகிறது" என்றும், "மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் காரை நான்கு பேர் பின்தொடர்ந்தார்களாம். ஒரு வி.ஐ.பிக்கே இந்த நிலை என்றால், பொதுமக்களின் நிலை என்ன?" என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன

சர்ச்சையை கிளப்பும் ஆண்குறி இருக்கை!

இந்த சம்பவத்தை உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரோமியோ எதிர்ப்புப் படையுடன் தொடர்புபடுத்தி, "இவர்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்து தப்பி வந்த ரோமியோக்களா என்பதை விசாரியுங்கள்" என்று ஒரு கருத்து வெளியாகியுள்ளது.

நெடுஞ்சாலையோர மதுக்கடைகள், பார்கள் மூடல்; நட்சத்திர ஹோட்டல்கள் அதிர்ச்சி

"தில்லி போலீஸ் மூன்று ஆண்டுகளாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கீழ் பணியாற்றி வருகிறது. பாரதீய ஜனதா கட்சி நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கப்போகிறது?" என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்

காணொளி: செருப்பு தைப்பவருக்கு 10 ரூபாய் கூலிக்கு 100 ரூபாய் தந்த ஸ்மிரிதி இரானி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
செருப்பு தொழிலாளிக்கு 10 ரூபாய் கூலிக்கு 100 ரூபாய் தந்த ஸ்மிருதி இரானி

"காதலர்களுக்கு கெட்ட செய்தி. ஸ்ம்ரிதி இரானியை பின்தொடர்ந்த நான்கு காதலர்களை தில்லி போலீஸ் கைது செய்துவிட்டது" என்று ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் அனுராக் தீக்க்ஷித் "ஸ்மிரிதி இரானியின் காரை பின்தொடர்ந்த நான்கு இளைஞர்கள் கைது. பாதுகாப்பான நாட்டில், பாதுகாப்பு இல்லாத மந்திரிக்கு இஜெட் பிரிவு பாதுகாப்பு" என்று ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த செய்திகளையும் படிக்கலாம்:

கொலம்பிய நிலச்சரிவால் நிகழ்ந்த சோகம் (புகைப்படத் தொகுப்பு)

செருப்பு தைப்பவருக்கு 10 ரூபாய் கூலிக்கு 100 ரூபாய் தந்த ஸ்மிருதி இரானி

பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை வழங்க விரைவில் சட்டம்: ம.பி. முதல்வர் தகவல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்