"திருப்புமுனை" சுரங்கப்பாதையின் 10 சிறப்பம்சங்கள்

இந்தியாவில், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டிருக்கும் நாட்டின் மிக நீண்ட சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோதிஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

படத்தின் காப்புரிமை PIB

இந்தியாவின் சாலை போக்குவரத்தில் திருப்புமுனையான கருதப்படும் இந்த சுரங்கப்பாதையின் பத்து சிறப்பம்சங்கள்:

  • செனானி-நஸ்ரி இடையிலான 41 கிலோ மீட்டர் தூரம், இந்த சுரங்கப்பாதையால் இனி 10.9 கிலோ மீட்டராக குறைந்துவிடும் என்கிறார் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்.
  • 9.2 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை, பனி மற்றும் மழை காலத்திலும் செயல்படக்கூடியது.
படத்தின் காப்புரிமை PIB
  • நாளொன்றுக்கு 27 லட்ச ரூபாய் அளவிலான எரிபொருள் என்ற விகிதத்தில், ஆண்டுதோறும் 99 கோடி ரூபாய் மதிப்பிலான எரிபொருள் இதனால் சேமிக்கப்படும்.

மலிவு விலையில் கிடைத்த `காஸ்ட்லி' அதிர்ச்சி!

  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதுகெலும்பாக இருக்கும் என்று வர்ணிக்கப்படும் இந்த சுரங்கப்பாதை, மாநிலத்தின் வருவாயை பெருக்கும், சுற்றுலாவை ஊக்குவிக்கும்.
  • சுரங்கப்பாதை முழுமைக்கும் காற்றோட்டம் கிடைக்குமாறு, குறுக்கு காற்றோட்ட வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், இந்த வசதிகளுடன் அமைக்கப்படும் முதல் சுரங்கப்பாதை இதுதான். உலக அளவில் 6-ஆவது.
படத்தின் காப்புரிமை PIB
  • நீண்ட சுரங்கப் பாதைகளுக்கு இதுபோன்ற காற்றோட்ட வசதிகள் செய்யப்படவேண்டியது அவசியமானது. நீளமான சுரங்கப்பாதைகளில் செல்லும் வாகனங்கள் வெளிப்படுத்தும் மாசுக்களில் இருக்கும் கேடுகளை விளைவிக்கும் வாயுக்களும், கரியமில வாயுவும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.

சர்ச்சையை கிளப்பும் ஆண்குறி இருக்கை!

  • 2,519 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டிருக்கும் இந்த சுரங்கப்பாதை, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையின் 286 கிலோ மீட்டர் நீள நான்கு வழிப்பாதையின் ஓர் அங்கம். ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதையில் இதுவும் ஒன்று.
  • இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு இரண்டரை மணி நேரத்தில் செல்லமுடியும்.
படத்தின் காப்புரிமை PIB
  • சுரங்கப்பாதையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க 124 சி.சி.டி.வி கேமராக்களும், நவீன ஸ்கேனர் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. மூன்றடுக்கு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், போதுமான வெளிச்சமும் இருக்கும்.

டெல்லியில் பெண் அமைச்சரை பின்தொடர்ந்த இளைஞர்கள்

  • மொபைல் நெட்வொர்க் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் வகையில், பி.எஸ்.என்.எல், ஏர்டெல், மற்றும் ஐடியா நெட்வொர்க் சிக்னல்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலதிக செய்திகள்:

கொலம்பிய நிலச்சரிவால் நிகழ்ந்த சோகம் (புகைப்படத் தொகுப்பு)

பெண்களின் இரவுப்பணியை நிறுத்த கர்நாடக அரசு முயற்சி

வந்தே மாதரம் பாடினால்தான் கவுன்சிலர் பதவி தப்புமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்