லாரிகள் வேலை நிறுத்தம்: தமிழகத்தில் வாபஸ்

  • 3 ஏப்ரல் 2017

தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் சமரசம் எட்டப்பட்டுள்ளதால், தமிழகத்தில் 5 நாட்களாக தொடர்ந்து வந்த லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக, தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தமிழகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் (கோப்புப் படம்)

இன்று திங்கள்கிழமை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமாரசாமி, தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிட்டதாக கூறி, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

தமிழக விவசாயிகளின் நூதன போராட்டம் (புகைப்படத் தொகுப்பு)

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக உள்ளது என குறிப்பிட்டார்.

இருந்தப்போதும் தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும் என போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அப்போது குறிப்பிட்டார்.

கடந்த 5 தினங்களாக தென்னிந்திய மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தார்கள்.

டெல்லியில் தமிழக விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு

குறிப்பாக, தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் செய்ய தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வரை, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடங்கியிருந்தார்கள்.

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்கிற அச்சம் நிலவி வந்த சூழலிலும், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஏறி வந்த சூழலிலும், இன்று திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதே சமயம், அண்டை மாநிலங்களில் லாரிகளின் வேலை நிறுத்தம் தொடர்வதால், ஒரு சில பிரச்சனைகளை தமிழகமும் சந்திக்க நேரிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்