ராஜஸ்தானில் பசுக்களை கடத்துவதாக பசு பாதுகாப்புக் குழுவால் தாக்கப்பட்டவர் பலி

  • 5 ஏப்ரல் 2017

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் அல்வர் நகரில் பசு பாதுகாவலர்கள் என்று சந்தேகிக்கப்படும் குழுவால் தாக்கப்பட்டார் நபர் உயிரிழந்தார்.

படத்தின் காப்புரிமை MANSI THAPLIYAL
Image caption பசு பாதுகாவலர்கள் (கோப்புப் படம்)

சனிக்கிழமை மாலை, ஹரியானாவைச் சேர்ந்த வாகனத்தில் பசுக்களை ஏற்றிக் கொண்டிருந்தபோது பசு பாதுகாவலர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் தாக்கப்பட்டனர்.

அல்வர் போலிஸார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதில் செவ்வாய்க்கிழமையன்று ஒருவர் உயிரிழந்தார்; அதை அல்வர் போலிஸார் பிபிசியிடம் உறுதிப்படுத்தினர்.

இந்த தாக்குதல் நெடுஞ்சாலை ஒன்றில் நடைபெற்றதாகவும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அல்வரின் மூத்த போலிஸ் கண்காணிப்பாளர் பராஸ் ஜெயின் தெரிவித்தார்.

உ.பி.யில் இறைச்சிக் கடைகள் மீதும் இறுகும் பிடி: `பின்னணியில் இருப்பது சட்டமா, மதமா?’

மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது 5 பிரிவில் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

தாக்குதல் மற்றும் கொலை என்றும் வழக்கு பதிவிடப்பட்டுள்ளது ஆனால் இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என அல்வரின் துணை போலிஸ் கண்காணிப்பாளர் பர்மல் குர்ஜார் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உள்ளூர் மக்கள் என்றும் வீடியோவின் மூலம் அவர்களை தேடி வருவதாகவும் போலிஸார் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் கசாப்பு கடை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட தாக்குதல் வீடியோ நீக்கப்பட்டு விட்டது

தாக்குதலுக்குள்ளான குழுவிடம் பசுக்கள் தொடர்பான ஆவணங்கள் இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளானவர்கள் பசுக்களை வாங்க ராஜஸ்தான் செல்பவர்கள் என்றும் பால் விற்பனைக்காக பசுக்களை வாங்குவது வழக்கம் என்றும் உயிரிழந்தவரின் உறவினர் பிபிசியிடம் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்