அமைச்சர் இல்லம் உட்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் வீடு, அவரது உறவினர்களின் வீடு, அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் என பல இடங்களில் வருமான வரித்துறை சோதனையை நடத்திவருகிறது.

படத்தின் காப்புரிமை TNDIPR

சென்னையில் அமைச்சர்கள் வசிக்கும் க்ரீன் வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லம், எழும்பூரில் உள்ள ஒரு வீடு உள்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை காலை முதல் நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் உள்ள விஜய பாஸ்கருக்குச் சொந்தமான கல்லூரிகள், கல்குவாரிகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

மேலும், நடிகர் சரத் குமாரின் கொட்டிவாக்கம் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுதவிர, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோரின் இல்லத்திலும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அ.தி.மு.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்குச் சொந்தமான இடங்கள், சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனைகள் அனைத்தும் பல இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினர் உதவியுடன் நடைபெற்று வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்