ராஜூமுருகனின் ஜோக்கர் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு

  • 7 ஏப்ரல் 2017

ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி கடந்தாண்டு வெளியான ஜோக்கர் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Joker

இன்று புதுதில்லியில் 64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.

அதில், சிறந்த தமிழ் மொழி திரைப்படமாக ராஜூமுருகனின் ஜோக்கர் திரைப்படம் அறிவிக்கப்பட்டது.

சினிமா விமர்சனம்: டோரா

மேலும், அதே திரைப்படத்தில் வரும் 'லவ் யூ ஜாஸ்மீனு' என்ற பாடல் பாடிய பின்னணிப் பாடகர் சுந்தர் ஐயர் ஆண்கள் பிரிவில் சிறந்த பாடகராக தேர்வு செய்யப்பட்டார்.

விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் வரும் 'எந்தப் பக்கம்' என்ற பாடலுக்காக வைரமுத்து சிறந்த பாடலாசிரியராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நா.முத்துகுமார் மரணம்: அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு 24 என்ற தமிழ் திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மொழி திரைப்படம்
துளு மடிப்பூர்
தமிழ் ஜோக்கர்
குஜராத்தி ராங் சைட் ராஜூ
தெலுங்கு பெலி சுப்புலு
மராத்தி தக்ஷகிரியா
வங்காளம் பிஸர்ஜன்
மலையாளம் மஹேஷிந்தே பிரத்திக்ராம்
கொங்கினி கி சாரா சாரா
கன்னடம் ரிசர்வேஷன்
இந்தி நீர்ஜா

மலையாளத்தில் வெளியான புலிமுருகன் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சிறப்பான சண்டை காட்சிகளுக்காக பீட்டர் ஹெய்னுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த குழந்தைகள் திரைப்படமாக இந்தியில் வெளியான தானக் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா மூலம் சிகரெட் நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றனவா?

சமூகம் சார்ந்த பிரச்சனையை எடுத்துரைத்த சிறந்த படமாக அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்து வெளியான பிங் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை TWITTER

சிறந்த நடிகராக ரஸ்டம் திரைப்படத்திற்காக அக்ஷேய் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மின்னாமினுங்கு திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சுரபி லக்ஷ்மி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

"இனிமேல் சினிமா மட்டுமே; அரசியல் இல்லை" வடிவேலு

வென்டிலேட்டர் படத்திற்காக சிறந்த இயக்குநராக ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தங்கல் திரைப்படத்தில் அமீர் கானின் மகளாக நடித்த ஸெய்ரா வசிம் சிறந்த துணை நடிகையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

புலிமுருகன், ஜனதா காரேஜ் மற்றும் முந்திரிவலிகல் தலிர்க்கும்போல் ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மோகன்லாலுக்கு தேர்வுக்குழுவின் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்திகளையும் நீங்கள் விரும்பலாம்

திரைப்பட விமர்சனம்: கவண்

சினிமா போஸ்டர்கள் தேர்தல் பிரச்சாரமாகுமா ?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்