தற்கொலை எண்ணத்தைத் தடுக்கும் பாடலுக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சி: வைரமுத்து

ஏழாவது முறையாக இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் விருது பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவிஞர் வைரமுத்து, தற்கொலை எண்ணத்தைத் தடுக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்ட தனது பாடலுக்கு விருது கிடைத்திருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Facebook

"அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் என் சமகாலச் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது என்றும், பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல; நான் ஒரு கருவி மட்டுமே", என்று ஓர் அறிக்கையில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

ராஜூமுருகனின் ஜோக்கர் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு

தர்மதுரை படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு இந்த விருது கிடைத்துள்ளதால், இத்திரைப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமி, இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சுகுமார், நடித்த விஜய்சேதுபதி - தமன்னா, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், குரல் கொடுத்த பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

இளங்கன்று ஒன்று வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே: வைரமுத்து உருக்கம்

இந்தப் பாடல் தற்கொலைக்கு முயன்றவனைத் தாங்கிப் பிடிக்கும் பாடலாகும் என்று அவர் கூறியுளள்ளார்.

தற்கொலை என்பது தேசத்தின் நோயாகப் பெருகிவருகிறது. காதல் தோல்வி - மன அழுத்தம்- அச்சம்- வறுமை என்ற காரணங்களே மனிதர்களைத் தற்கொலைக்கு தள்ளுகின்றன.

இந்திய அரசின் பத்ம விருதுகள் அறிவி

எந்த ஒரு தோல்வியிலும் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. தோல்வி என்பது அடுத்த வாசலுக்கான கதவு என்று உணர்த்த வேண்டும். அதைத்தான் இந்தப்பாடலை பாடும் நாயகி நாயகனுக்கு நினைவுறுத்துவதாக பாடலின் வரிகளோடு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

கவிஞர் வைரமுத்து தேசிய விருது பெற்ற படங்கள்:

ஆண்டு படம்
1986 முதல் மரியாதை
1993 ரோஜா
1995 கருத்தம்மா மற்றும் பவித்ரா
2000 சங்கமம்
2003 கன்னத்தில் முத்தமிட்டால்
2011 தென்மேற்குப் பருவக்காற்று
2017 தர்மதுரை

காணொளி: தமிழ்நாட்டு குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் - வைரமுத்து

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தமிழ்நாட்டு குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் - வைரமுத்து

மேலதிக தகவல்களுக்கு:

அரசியல் சர்ச்சையால் தமிழக திரையரங்குகளிலிருந்து வெளியேறியது 'இனம்'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்